கடந்த சில நாட்களுக்கு முன்பு 13 வீரர்களுக்கு, 12 நாள்கள், ‘குடியிருப்பு பயிற்சி முகாம்’ என்ற பெயரில் கொழும்பு கிரிக்கெட் கிளப்பில் வைத்து பயிற்சி மேற்கொள்ளுமாறு இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியது.
இதைத்தொடர்ந்து தற்போது இந்தப் பயிற்சியில் வீரர்களை ஈடுபட வைத்த இலங்கை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
எச்சில் தொட்டு வைப்பதை விட வியர்வையை தேய்ப்பதால் பந்து நன்கு பலப்படுவதாக பயிற்சி மேற்கொள்ளும் வீரர்கள் தெரிவித்துள்ளனர். எச்சில் தொட்டு பந்தை பலப்படுத்துவதுதான் அனைவராலும் விரும்பப்பட்டது. ஆனால் தற்போது இந்த புதிய முறை நல்ல பலன் அளிக்கிறது.
ஐசிசி குழுவில் நானும் அங்கம் வகிப்பதால், பந்தை பலப்படுத்துவதற்கு வியர்வை பயன்படுத்துவது குறித்து நடைபெற்ற விவாதங்களை நன்கு அறிவேன். மேலும், வியர்வையால் எந்த தொற்றும் வர வாய்ப்பு இல்லை என நிரூபணம் ஆகியுள்ளதால், பீதியடைய தேவையில்லை என்றார்.
முன்னதாக, இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே தலைமையிலான ஐசிசி குழு, கரோனா வைரஸ் தொற்று காரணமாக பந்து வீச்சாளர்கள் எச்சிலுக்கு பதிலாக வியர்வை துளிகளை வைத்து பந்தை பலப்படுத்தவோ, பாலிஷ் செய்யவோ வேண்டும் என பரிந்துரை செய்தது.
இதைத்தொடர்ந்து தற்போது இலங்கை அணி வீரர்கள் அந்த முறையை பின்பற்ற தொடங்கியிருப்பதாக அந்த அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.