ETV Bharat / sports

பிக் பாஷ்: முதல் போட்டியிலேயே மாஸ் காட்டிய சிட்னி தண்டர்ஸ்!

author img

By

Published : Dec 17, 2019, 8:19 PM IST

நடப்பு சீசனுக்கான பிக் பாஷ் தொடரின் முதல் போட்டியில் சிட்னி தண்டர்ஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணியை வீழ்த்தியுள்ளது.

Sydney thunder
Sydney thunder

இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரைப் போல, ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 தொடர் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானது. அந்தவகையில், 2019-20ஆம் ஆண்டுக்கான பிக் பாஷ் தொடரின் ஒன்பதாவது சீசன் இன்று பிரிஸ்பேனில் தொடங்கியது.தொடரின் முதல் போட்டியில் கிறிஸ் லின் தலமையிலான பிரிஸ்பேன் ஹீட் அணி, ஃபெர்குசன் தலைமையிலான சிட்னி தண்டர்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சிட்னி தண்டர்ஸ் அணி ஃபெர்குசனின் பொறுப்பான ஆட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ரன்களை குவித்தது.

ஃபெர்குசன் 44 பந்துகளில் ஆறு பவுண்டரிகள், மூன்று சிக்சர்கள் என 73 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்கமால் களத்திலிருந்தார். அவருக்கு ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து விளையாடி வந்த அலெக்ஸ் ரோஸ் 30 ரன்களிலும், ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய கிறிஸ் க்ரீன் 25 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பிரிஸ்பேன் ஹீட் அணி தரப்பில் மிட்சல் ஸ்வீப்சன் இரண்டு, பென் கட்டிங் பென் லாஃப்லின், மார்க் ஸ்டீகிட்டி, ஜோஷ் லலோர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

இதைத்தொடர்ந்து, 173 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய பிரிஸ்பேன் ஹீட் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்துவந்தது. இறுதியில் அந்த அணி 19.2 ஓவர்களிலேயே 143 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததால், சிட்னி தண்டர்ஸ் அணி இப்போட்டியில் 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. பிரிஸ்பேன் ஹீட் அணி தரப்பில் பென் கட்டிங் 28, மேட் ரீன்ஷா 26 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

சிட்னி தண்டர்ஸ் அணி சார்பில் டேனியல் சாம்ஸ், ஜோனதன் குக், கிறிஸ் க்ரீன், அர்ஜூன் நாயர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர். இப்போட்டியில் சிட்னி தண்டர்ஸ் அணியின் வெற்றிக்கு துணையாக இருந்த ஃபெர்குசன் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். இதைத்தொடர்ந்து, நாளை நடைபெறவுள்ள இரண்டாவது லீக் போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் அணி, பெர்த் ஸ்கார்சரஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

இதையும் படிங்க: ஐந்து ரன்கள் தேவை... ஐந்து விக்கெட்டுகளை பறிகொடுத்து பரிதாப தோல்வி அடைந்த டாஸ்மானியா! ஆஸி.யில் மிராக்கல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.