ETV Bharat / sports

மீண்டும் காயமடைந்த புவி... ரசிகர்கள் சோகம்!

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் காயம் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.

bhuvneshwar-kumar-ruled-out-of-odi-series

author img

By

Published : Dec 14, 2019, 10:35 AM IST

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 மற்றும் ஒருநாள் போட்டி தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை முதல் ஒருநாள் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் காயம் காரணமாக அணிலியிருந்து வெளியேறியுள்ளார்.

இவருக்கு பதிலாக வங்கதேச அணிக்கு எதிரான தொடரின்போது ஆடிய ஷர்துல் தாகூர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருண் பேசுகையில், முதல் போட்டி முடிவடைந்த பின்னர் தான் புவனேஷ்வர் குமாரின் காயம் குறித்து முடிவு எடுக்கப்படும் எனக் கூறினார்.

ஷர்துல் தாகூர்
ஷர்துல் தாகூர்

இதற்கு முன்பாக தொடக்க வீரர் ஷிகர் தவான் காயம் காரணமாக விலகியதையடுத்து, மயாங்க் அகர்வால் தேர்வு செய்யப்பட்டார். தற்போது புவனேஷ்வர் குமாருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், இந்திய ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பைத் தொடருக்கு ஏற்றார் போல் அணி நிர்வாகம் வீரர்களைத் தேர்வு செய்துவரும் நிலையில், காயம் காரணமாக வீரர்கள் விலகி வருவது தொடர்ந்து வருகிறது.

இதையும் படிங்க: 'நான் தான் விராட் கோலி' - வார்னர் மகளின் செல்ல சேட்டை!

Intro:Body:

https://www.etvbharat.com/english/national/sports/cricket/cricket-top-news/india-vs-west-indies-bhuvneshwar-kumar-ruled-out-of-odi-series/na20191213233517283

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.