இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார். இவர் இந்திய அணிக்கு அறிமுகமானபோது, வீசிய முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ஆனால் அதற்கு முன்னதாக 19 வயதில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை ரஞ்சி டிராபி போட்டியின்போது டக் அவுட் செய்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.
இதுகுறித்து ஜெமீமா ரோட்ரிக்ஸ் மற்றும் ஸ்மிருதி மந்தனா நடத்தும் யூ ட்யூப் சேனலுக்கு பேட்டியளித்த புவனேஷ்வர் குமார், ''சச்சின் விக்கெட்டை வீழ்த்தியதற்காக நான் அப்போதைய உத்தர பிரதேச அணியின் கேப்டன் முகமது கைஃப்பிற்குதான் நன்றி கூறவேண்டும்.
ஒவ்வொரு போட்டி தொடங்கும்போதும், விக்கெட் வீழ்த்த வேண்டும் என அனைவரும் நினைப்போம். ஆனால் இவரின் விக்கெட்டை வீழ்த்துவோம் என்றும், இவ்வளவு விக்கெட்டை வீழ்த்துவோம் என்றும் நினைக்க மாட்டோம்.
சச்சினை விக்கெட் வீழ்த்தியது எனது அதிர்ஷ்டம். நான் ஒரு இன் ஸ்விங் வீசினேன். அதனை சச்சின் ஷார்ட் லெக்கிற்கும் இல்லாமல் மிட் விக்கெட்டிற்கும் இல்லாமல் நடுப்பகுதியில் அடித்தார். அதற்கேற்றாற் போல் கேப்டன் கைஃப் ஃபீல்டிங் செய்திருந்தார். அதனால்தான் எனக்கு சச்சின் விக்கெட்டை வீழ்த்த முடிந்தது'' என்றார்.
இதையும் படிங்க: ஷர்துல் தாகூர் பயிற்சி... பிசிசிஐ கவலை...!