ETV Bharat / sports

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ் தந்தை காலமானார்! - Ben Stokes' Father

நியூசிலாந்து ரக்பி அணியின் முன்னாள் வீரரும், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸின் தந்தையுமான கெட் ஸ்டோக்ஸ் மூளையில் ஏற்பட்ட புற்றுநோயால் இன்று காலமானார்.

Ben Stokes' Father Dies After Battle With Brain Cancer

author img

By

Published : Dec 8, 2020, 10:59 PM IST

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டராக இருப்பவர் பென் ஸ்டோக்ஸ். இவரது தந்தை கெட் ஸ்டோக்ஸ். இவர் நியூசிலாந்து ரக்பி அணியின் முன்னாள் வீரராகவும், அந்த அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த கெட் ஸ்டோக்ஸ், நியூசிலாந்திலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தத் தகவலை இங்கிலாந்து & வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் உறுதிசெய்துள்ளது.

கெட் ஸ்டோக்ஸின் இறப்பு செய்தியறிந்த பல்வேறு கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரக்பி வீரர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

  • RIP Ged Stokes. One of the greatest characters in our special cricket family.

    We're with you Ben. Strength to you and your family 💗🙏 pic.twitter.com/jA2EA0DVIk

    — Rajasthan Royals (@rajasthanroyals) December 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்நிலையில் சமீபத்தில் ரத்து செய்யப்பட்ட தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடரில் பென் ஸ்டோக்ஸ் இடம்பெற்றதால், அவர் தென் ஆப்பிரிக்காவில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கரோனா பரிசோதனைக்கு பின் தாயகம் திரும்பும் இங்கிலாந்து அணி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.