2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி பிசிசிஐ தலைவராகவும், ஜெய் ஷா செயலாளராகவும் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
இதற்கு முன்னதாக கங்குலி மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்தின் பொறுப்பாளராகவும், ஜெய் ஷா குஜராத் கிரிக்கெட் சங்கத்தில் நிர்வாகியாகவும் பணிபுரிந்து வந்தனர். இதைத்தொடர்ந்து அவர்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டது.
லோதா கமிட்டியின் வழிகாட்டுதலின்படி, ஒருவர் தொடர்ந்து இரண்டு முறை சங்கத்தின் நிர்வாகியாக பதவி வகிக்க முடியாது. ஏற்கனவே, கங்குலி, ஜெய் ஷா ஆகியோர் நிர்வாகிகளாக பதவி வகித்து வரும் காரணத்தினால், அவர்களால் அடுத்த மூன்றாண்டுகளுக்கு நிர்வாகியாக பொறுப்பேற்க முடியாது.
இந்த விதிகளில் தளர்வு ஏற்படுத்தி, வரும் ஜூலை மாதம் முடிவடையவுள்ள அவர்களின் பதவிக் காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க உச்ச நீதிமன்றத்தில் பிசிசிஐ பொருளாளர் அருண் துமல் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த முடிவு கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற ஆண்டு கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வீரர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை வெளியிட்ட ஐசிசி!