கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் இந்தியாவில் நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. நாட்டில் இதுவரை 918 பேருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஏப்ரல் 14வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தவும் வைரஸ் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் இந்தியர்கள் அனைவரும் தங்களால் முடிந்த நிதியை பிரதமர் நிவாரண நிதிக்கு அளிக்கலாம் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார்.
மேலும் நிதியளிக்க வேண்டிய வங்கி கணக்குத் தொடர்பான தகவல்களும் பகிரப்பட்டன. இதைத்தொடர்ந்து, பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், சினமா நடிகர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் நிதியுதவி வழங்கிவருகின்றனர்.
-
NEWS : BCCI to contribute INR 51 crores to Prime Minister @narendramodi ji's Citizen Assistance and Relief in Emergency Situations Fund
— BCCI (@BCCI) March 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
More details here - https://t.co/kw1yVhOO5o pic.twitter.com/RJO2br2BAo
">NEWS : BCCI to contribute INR 51 crores to Prime Minister @narendramodi ji's Citizen Assistance and Relief in Emergency Situations Fund
— BCCI (@BCCI) March 28, 2020
More details here - https://t.co/kw1yVhOO5o pic.twitter.com/RJO2br2BAoNEWS : BCCI to contribute INR 51 crores to Prime Minister @narendramodi ji's Citizen Assistance and Relief in Emergency Situations Fund
— BCCI (@BCCI) March 28, 2020
More details here - https://t.co/kw1yVhOO5o pic.twitter.com/RJO2br2BAo
அந்தவகையில், வருமானம் அதிகம் குவிக்கும் இந்திய கிரிக்கெட் வாரியமும், அதன் மாநில கிரிக்கெட் வாரியங்களும் சேர்ந்து கோவிட் -19 வைரஸைக் கட்டுப்படுத்தும் விதமாக ரூ. 51 கோடி நிதியுதவியை பிரதமரின் நிவாரண நிதிக்கு வழங்கவுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. மேலும் இந்த சிக்கலான சூழ்நிலையில் மத்திய மாநில அரசுகளுக்கு, பிசிசிஐ, அதன் மாநில கிரிக்கெட் வாரியங்களும் உதவும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா: ரூ. 1,500 கோடி நிதியுதவி அறிவித்த டாடா!