ETV Bharat / sports

இந்திய கிரிக்கெட் தலைமை பயிற்சியாளர் - இறுதிப் பட்டியலில் ரவி சாஸ்திரி

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படவுள்ள நபர்களின் இறுதிப் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

author img

By

Published : Aug 13, 2019, 2:46 PM IST

coach

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் உள்ளிட்ட பயிற்சியாளர் குழுவின் பதவிக்காலம் உலகக்கோப்பை தொடருடன் நிறைவடைந்தது. இதையடுத்து புதிய பயிற்சியாளரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. பின்னர் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என பல்வேறு பதவிகளுக்கும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர்.

புதிய தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்ய இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் கபில் தேவ், அனுஷ்மான் கேக்வாட், சாந்தா ரங்கசாமி உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இதே வேளையில் மற்ற பயிற்சியாளர்களை பிசிசிஐ தேர்வுக் குழுத் தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் தேர்வு செய்வார் என்றும் அறிவிக்கப்பட்டது.

தலைமை பயிற்சியாளர் பதவிக்கு தற்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இந்திய அணியின் முன்னாள் ஃபீல்டிங் பயிற்சியாளர் ராபின் சிங், ஆஸ்திரேலிய வீரர் டாம் மூடி உள்ளிட்ட பல்வேறு முன்னாள் கிரிக்கெட்டர்களும் பயிற்சியாளர்களும் விண்ணப்பித்திருந்தனர். மேலும் ஃபீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர் ஜான்டி ரோட்ஸ் விண்ணப்பத்திருந்தார்.

இந்நிலையில், தலைமை பயிற்சியாளர் பதவிக்கான இறுதிப்பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதில் ரவிசாஸ்திரி, ராபின் சிங், முன்னாள் இந்திய அணி மேலாளர் லால்சந்த் ராஜ்புத், ஆஸ்திரேலியாவின் டாம் மூடி, வெஸ்ட் இண்டீஸ் ஃபில் சிம்மன்ஸ், நியூசிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெசன் உள்ளிட்ட ஆறு பேரின் பெயர் இறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு வரும் வெள்ளிக்கிழமை நேர்காணல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக மீண்டும் ரவி சாஸ்திரி தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஏனெனில் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு செல்லும் முன் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ரவி சாஸ்திரி பயிற்சியாளராக தொடர வேண்டும் என விருப்பம் தெரிவித்திருந்தார்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.