இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பதவியேற்றபோது, ''உள்ளூர் கிரிக்கெட் வீரர்களுக்கான ஊதியத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' எனத் தெரிவித்தார். அதனால் உள்ளூர் வீரர்களுக்கான ஊதியத் திட்டங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
இந்த ஆண்டுக்கான இராணி கோப்பைத் தொடர் நடத்தப்படாமலேயே 2019-20ஆம் ஆண்டுக்கான உள்ளூர் கிரிக்கெட் சீசன் தொடர் ரஞ்சி டிராபி தொடரோடு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. ஆகஸ்ட் மாதத்தில் துலீப் டிராபி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால் தற்போதைய சூழல் முடிவுக்கு வந்தவுடனேயே கிரிக்கெட் பற்றிய பேச்சுகள் தொடங்கப்படும். இதுகுறித்து இந்திய கிரிக்கெட் நடவடிக்கைக் குழுவின் பொதுமேலாளர் சபா கரீம் பேசுகையில், ''உள்ளூர் கிரிக்கெட் வீரர்களில் யார் யாருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது என்பதில் இன்னும் தெளிவு ஏற்படவில்லை. அவர்களுக்கான ஊதியம் பற்றி பிசிசிஐ அலுவலர்கள் முடிவு செய்வார்கள்.
![சபா கரீம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/saba-karim_3004newsroom_1588249408_1087.jpg)
மே 3ஆம் தேதிக்கு பின்னர் அரசு சார்பில் வழங்கப்படும் ஆலோசனைகளுக்கு பிறகே கிரிக்கெட் தொடர் நடத்துவது பற்றிய முடிவு எடுக்கப்படும்.
2020-21ஆம் ஆண்டுக்கான உள்ளூர் கிரிக்கெட் சீசன் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட வேண்டும். ஆனால் கரோனா வைரஸ் காரணமாக இதுவரை எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. அதனை நடத்துவதற்காகவும் எவ்வித முன்னெச்சரிக்கை திட்டங்களும் எடுக்கவில்லை.
முடிந்தவரை இந்த ஆண்டில் எவ்வளவு உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை நடத்த முடியுமோ, நடத்த முயற்சி செய்வோம்'' என்றார்.
முன்னதாக பிசிசிஐ டி20 உலகக்கோப்பைக்கு பதிலாக ஐபிஎல் தொடரை நடத்த முயற்சி செய்ய வேண்டும். ஏனென்றால் ஆட்ட ஊதியத்தைத் தவிர்த்து உள்ளூர் கிரிக்கெட் வீரர்களுக்கு பொருளாதார அளவில் முன்னேற ஐபிஎல் மட்டுமே வாய்ப்பு என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியிருந்தார்.
இதையும் படிங்க: புல் ஷாட் புலி... மும்பையின் பாட்ஷா... 'ஹிட்மேன்' ரோஹித் ஷர்மா...!