கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக இந்தியாவில் இதுவரை 12 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர். மேலும் நோய் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவை மே 3ஆம் தேதி வரை நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஏற்கனவே இம்மாதம் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்த ஐபில் தொடர், தற்போது காலவரையின்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்த அரசு மேற்கொண்டுள்ள ஊரடங்கு உத்தரவின் காரணமாக ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் குறித்து பிசிசிஐ, ஐபிஎல் நிர்வாகக் குழுவின் அடுத்த அறிவிப்பு வரும்வரை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
NEWS : IPL 2020 suspended till further notice
— IndianPremierLeague (@IPL) April 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
More details here - https://t.co/ZmC2xndkUN pic.twitter.com/zWVIeI61hK
">NEWS : IPL 2020 suspended till further notice
— IndianPremierLeague (@IPL) April 16, 2020
More details here - https://t.co/ZmC2xndkUN pic.twitter.com/zWVIeI61hKNEWS : IPL 2020 suspended till further notice
— IndianPremierLeague (@IPL) April 16, 2020
More details here - https://t.co/ZmC2xndkUN pic.twitter.com/zWVIeI61hK
ஏனெனில் தேசத்தின் ஆரோக்கியத்திலும், நாட்டு மக்கள் நலனிலும் எங்களுக்கு அக்கரை உள்ளது. இதன் காரணமாக பிசிசிஐ, ஐபிஎல் உரிமையாளர்கள், ஸ்பான்சர்கள், ஒளிபரப்பு நிறுவனங்கள், பங்குதாரர்கள் என அனைவரும் இணைந்து ஐபிஎல் தொடரை பாதுகாப்பான சூழல் வரும் வரை ஒத்திவைக்கலாம் என முடிவெடுத்துள்ளோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஐபிஎல்லில் தனக்கு பிடித்த தருணங்களை பகிர்ந்த டூ பிளசிஸ்!