இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட மூன்றாம் கட்ட ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வந்த பின், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட பயிற்சி மையங்கள் இயங்கலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்தப் பயிற்சியின்போது மத்திய அரசு வழிக்காட்டுதல்களை பின்பற்ற வேண்டும் எனக் கூறியது.
வீரர்களின் பயிற்சிக்கு அனுமதி வழங்கப்பட்டாலும், விளையாட்டு சங்கங்கள் வீரர்களின் பயிற்சிக்கு முட்டுக்கட்டைப் போட்டது. கிரிக்கெட் வீரர்கள் யாரும் பயிற்சி மேற்கொள்ளவில்லை. அதேபோல் பிசிசிஐயால் ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்கள் அனைவரும் வாரியத்திடம் அனுமதி வாங்கிய பின்னரே பயிற்சியில் ஈடுபட வேண்டும் என தெரிவித்திருந்தது.
-
India pacer Shardul Thakur hits training ground in Boisar (Maharashtra). @imShard
— Harit Joshi (@Haritjoshi) May 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Video courtesy: @ajinkyasnaik @mid_day pic.twitter.com/8qa3lpuqQT
">India pacer Shardul Thakur hits training ground in Boisar (Maharashtra). @imShard
— Harit Joshi (@Haritjoshi) May 23, 2020
Video courtesy: @ajinkyasnaik @mid_day pic.twitter.com/8qa3lpuqQTIndia pacer Shardul Thakur hits training ground in Boisar (Maharashtra). @imShard
— Harit Joshi (@Haritjoshi) May 23, 2020
Video courtesy: @ajinkyasnaik @mid_day pic.twitter.com/8qa3lpuqQT
நேற்று இந்திய அணி வீரர் ஷர்துல் தாகூர் தனது பயிற்சியை மும்பையின் பல்கர் மாவட்டத்தில் தொடங்கினார். இதுகுறித்து பிசிசிஐ அலுவலர் பேசுகையில், ''பிசிசிஐ உடன் ஷர்துல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதனால் அவர் பயிற்சி செய்வதற்கு அனுமதி இல்லை. அவராக பயிற்சியைத் தொடங்கியுள்ளது கவலையாக உள்ளது. அதனை அவர் செய்திருக்கக் கூடாது'' என்றார்.
இதையும் படிங்க: ஐபிஎல் பற்றி அரசுதான் முடிவு செய்யும்: கிரண் ரிஜிஜு...!