பிசிசிஐ விதிகளின்படி ஒருவர் இரட்டை பதவிகளை வகிக்க முடியாது என, மத்தியப் பிரதேச கிரிக்கெட் சங்க உறுப்பினர் சஞ்சய் குப்தா, ராகுல் டிராவிட் மீது புகார் அளித்துள்ளார். அதில், முன்னாள் கிரிக்கெட் வீரர் டிராவிட் தற்போது தேசிய கிரிக்கெட் அகாதெமி தலைவராகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளரின் இந்தியா சிமெண்ட்ஸ் குழுவின் துணைத் தலைவர் பதவியிலும் இருப்பது பிசிசிஐ விதிகளை மீறுவதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்தக் குற்றச்சாட்டுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்க ராகுல் டிராவிட்டுக்கு, பிசிசிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முன்னதாக சச்சின் டெண்டுல்கர், வி.வி.எஸ். லக்ஷ்மண் ஆகியோர் இரட்டைப் பதவியில் இருப்பதாக சஞ்சய் குப்தா புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.