உச்ச நீதிமன்றத்தால் வினோத் ராய் தலைமையில் நிர்வாகக் குழு அமைக்கப்பட்டபோது, 2016இல் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைமைச் செயல் அலுவலராக ராகுல் ஜோரி நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில் பிசிசிஐ தலைவராக கங்குலியும், செயலாளராக ஜெய் ஷாவும் பதவியேற்றனர். இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதத்தில் தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக ராகுல் ஜோரி பிசிசிஐக்கு கடிதம் அனுப்பினார்.
இதையடுத்து இவரது பதவிக்காலம் ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், இவரது ராஜினாமா கடிதத்தை பிசிசிஐ கடந்த வாரம் ஏற்றுக்கொண்டது. இதனால் தற்போது பிசிசிஐயின் இடைக்கால தலைமைச் செயல் அலுவலராக ஹேமங் அமின் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஐபிஎல் தொடரின் தலைமை இயக்க அலுவலராகவும் இருந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.