ETV Bharat / sports

ஐபிஎல் பாணியில் 'பிக் பாஷ் டி20' தொடர் - ஐபிஎல் போட்டி

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் நடத்தப்படும் பிக் பாஷ் டி20 கிரிக்கெட் தொடரில் ஐபிஎல் டி20 தொடரைப் போன்று பேட்டிங் அணிக்கு strategic time out (இடைவேளை) வழங்கப்படவுள்ளது.

bbl
author img

By

Published : Oct 24, 2019, 3:31 AM IST

இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் போட்டிகளைப் போன்று ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 தொடர் நடத்தப்படுகிறது. இதனிடையே பிக் பாஷ் டி20 தொடரின் ஒன்பதாவது சீசன் டிசம்பர் 17ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டிகளுக்காக அணியினர் தயாராகிவரும் சூழலில், புதிய விதிமுறைகள் குறித்த அறிவிப்பை பிக் பாஷ் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இந்த புதிய விதிமுறையின்படி, போட்டியின் போது இரண்டு அணிகளுக்கும் தலா ஒன்றரை நிமிடங்கள் வரை strategic time out என்னும் இடைவேளை வழங்கப்படும். பேட்டிங் செய்யும் அணி ஏழு முதல் 13 ஓவர்களுக்குள் இந்த இடைவேளையை தேவைப்படும் சமயங்களில் எடுத்துக் கொள்ளலாம். ஓவர்கள் முடியும் சமயங்களில் இந்த இடைவேளைகளை எடுக்கலாம்.

மேலும் சூப்பர் ஓவர் முறையிலும் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி தொடரின் இறுதிப்போட்டி உள்ளிட்ட நாக்-அவுட் போட்டிகள் டையில் முடியும் சமயத்தில் வெற்றியாளரை தீர்மானிக்கும் வரை சூப்பர் ஓவர் வீசப்படும். லீக் போட்டிகளில் சூப்பர் ஓவரும் டையில் முடிந்தால் இரு அணிகளுக்கும் புள்ளிகள் சம அளவில் பிரித்து கொடுக்கப்படும்.

ஐபிஎல் டி20 தொடரில் இதே போன்று strategic time out வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த சமயங்களில் வீரர்கள் சிறிது நேரம் ஓய்வு எடுத்துக்கொண்டு, கூல் டிரிங்ஸ் தண்ணீர் போன்றவற்றை அருந்துவார்கள்.

இந்த புதிய விதிகள் குறித்து பேசிய பிக் பாஷ் லீக்கின் தலைவர் அலாஸ்டர் டாப்சன், 'நாங்கள் எப்போதும் அணிகள், வீரர்கள், ரசிகர்கள் இடையே நிலவும் போட்டியை மேம்படுத்த முயற்சி எடுத்துவருகிறோம். இதில் பேட்டிங் அணிக்கு வழங்கப்படவுள்ள இடைவேளை குறித்து கடந்த இரண்டு வருடங்களாக ஆலோசனை செய்யப்பட்டது. பிற நாடுகளில் நடத்தப்படும் டி20 போட்டிகளை பார்த்த பின்பே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

ஐசிசி உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்குப் பின் சூப்பர் ஓவர் முறை குறித்து உலக அளவில் பேசப்பட்டது. எனவே பிக் பாஷ் தொடரில் அணிகளுக்கும் ரசிகர்களுக்கும் திருப்திகரமான முடிவுகள் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சூப்பர் ஓவர் விதியில் மாற்றம் செய்துள்ளோம்' என்று தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.