பிக் பாஷ் டி20 தொடரின் ஒன்பதாவது சீசனுக்கான இறுதிப் போட்டி இன்று சிட்னியில் நடைபெற்றது. இதில், முன்னாள் சாம்பியன் சிட்னி சிக்சர்ஸ் - மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மழை குறுக்கிட்டதால், இப்போட்டி 12 ஓவர்களாகக் குறைக்கப்பட்டன. இதையடுத்து, இப்போட்டியில் டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த சிட்னி சிக்சர்ஸ் அணி, தொடக்க வீரர் ஜோஷ் ஃபிலிப்பின் அதிரடியான ஆட்டத்தால் சிட்னி சிக்சர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 12 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 116 ரன்களை எடுத்தது. 29 பந்துகளில் நான்கு பவுண்டரிகள், மூன்று சிக்சர்கள் உட்பட ஜோஷ் ஃபிலிப் 52 ரன்களில் ஆட்டமிழந்தார். மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியில் கேப்டன் மேக்ஸ்வெல், ஆடம் ஜாம்பா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
![BBL: Sydney Sixers beat Melbourne Stars, win 2nd title](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/6005097_j.jpg)
இதைத்தொடர்ந்து, 117 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. இந்த தொடரில் 600க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்ற ஸ்டோய்னிஸ் இன்று 10 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து, நிக் மேடின்சன் ரன் ஏதும் எடுக்காமலும், மேக்ஸ்வெல் ஐந்து ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேற இறுதிவரை போராடிய நிக் லார்கின் 26 பந்துகளில் இரண்டு பவுண்டரி, இரண்டு சிக்சர்கள் என 38 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தார். இறுதியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 12 ஓவர்களில் ஆறு விக்கெட்டை இழந்து 96 ரன்கள் மட்டுமே எடுத்தது.
![BBL: Sydney Sixers beat Melbourne Stars, win 2nd title](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/6005097_wa.jpg)
சிட்னி சிக்சர்ஸ் அணி சார்பில் நாதன் லயான், ஸ்டீவ் ஸ்டீபன் ஓ கீஃப் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.இதனால் சிட்னி சிக்சர்ஸ் அணி இப்போட்டியில் 19 ரன்கள் வித்தியாசத்தில் மெல்போர்ன்ஸ் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தி எட்டு வருடங்களுக்கு பின் தனது இரண்டாவது பிக் பாஷ் கோப்பையை வென்றது.
-
🙌🙌🙌 @BBL CHAMPIONS AGAIN !!! pic.twitter.com/ZgSNfV8Q6F
— Sydney Sixers (@SixersBBL) February 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">🙌🙌🙌 @BBL CHAMPIONS AGAIN !!! pic.twitter.com/ZgSNfV8Q6F
— Sydney Sixers (@SixersBBL) February 8, 2020🙌🙌🙌 @BBL CHAMPIONS AGAIN !!! pic.twitter.com/ZgSNfV8Q6F
— Sydney Sixers (@SixersBBL) February 8, 2020
2012இல் பிக் பாஷ் டி20 தொடரின் முதல் சீசனில் சிட்னி சிக்சர்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸை வீழ்த்தி முதல் கோப்பையை வென்றது நினைவுகூரத்தக்கது. இன்று பேட்டிங்கில் மிரட்டிய ஜோஷ் ஃபிலிப் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இதையும் படிங்க: இனியும் நாங்கள் கத்துக்குட்டிகள் இல்லை; மற்ற அணிகளை மிரட்டும் வங்கதேசம்