ETV Bharat / sports

'ஓரினச்சேர்க்கையாளர்' கமெண்ட்; ஸ்டோய்னிஸுக்கு அபராதம் விதித்த ஆஸ்திரேலியா

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய வீரர் கேன் ரிச்சர்ட்சனை 'ஓரினச்சேர்க்கையாளர்' என அவதூறாக பேசிய சகவீரர் ஸ்டோய்னிஸுக்கு 7,500 டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

author img

By

Published : Jan 6, 2020, 8:02 AM IST

bbl-9-all-rounder-marcus-stoinis-fined-for-homophobic-abuse

நடப்பு ஆண்டுக்கான பிக் பாஷ் டி20 தொடரின் நேற்றைய போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியை எதிர்த்து மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி விளையாடியது. இதில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த போட்டிக்கிடையே மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி வீரர் மார்கஸ் ஸ்டோய்னிஸ், மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி வீரர் கேன் ரிச்சர்ட்சன்னைப் பார்த்து 'ஓரினச்சேர்க்கையாளர்' என அவதூறாகப் பேசினார்.

இந்த செயல் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் 2.1.3 என்ற விதிமுறைப்படி குற்றம் என்பதால், ஸ்டோய்னிஸ் மீது புகார் பதிவு செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட ஸ்டோய்னிஸ், நான் அந்த நிமிடத்தில் எல்லை மீறிவிட்டேன். அதனை உடனடியாக உணர்ந்துகொண்டேன். அதனால் தான் எனது நண்பர் கேன் ரிச்சர்ட்சனிடமும், நடுவர்களிடமும் மன்னிப்பு கேட்டேன். எனது செயலுக்கு நான் தான் பொறுப்பு. நான் அபராதத்தை ஏற்றுக்கொள்கிறேன் என்றார்.

Stoinis
Stoinis

கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் விதிமுறைகளை மீறிய ஸ்டோய்னிஸ்க்கு 7 ஆயிரத்து 500 டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய வீரர் பட்டடின்சனும் இதேபோன்ற செயலில் ஈடுபட்டதை அடுத்து ஒரு போட்டில் பங்கேற்க அவருக்குத் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆறு பந்தில் ஆறு சிக்சர்! 'யுவி'யை கண்முன் நிறுத்திய 'கிவி' வீரர்!

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.