ETV Bharat / sports

தோல்வி பயத்தை காட்டிய வங்கதேசம்! - இந்தியா வெற்றி - இந்தியா-வங்கதேசம்

இந்திய அணி வங்கதேச அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது. இங்கிலாந்துடன் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு கிடைத்த இந்த வெற்றியால் இந்திய அணி வீரர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

வெற்றிக் களிப்பில் இந்திய அணி வீரர்கள்
author img

By

Published : Jul 2, 2019, 11:46 PM IST

12 வது உலகக்கோப்பை இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.இன்று 40வது லீக் போட்டியில் இந்திய வங்கதேச அணிகள் மோதின.முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்கள் எடுத்தது.ரோஹித் சர்மா அபாரமாக ஆடி சதமடித்து சங்ககாரா சாதனையை சமன் செய்தார். ராகுலும் தன் பங்கிற்கு 77 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த கோலி 23 ரன்களும் பன்ட் 48 ரன்களுடனும் வெளியேறினர்.

அதிரடி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ஜாதவ்க்கு பதிலாக சேர்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக்கும் 8 ரன்களில் வெளியேறினார்.தோனி 35 ரன்களில் ஆட்டமிழந்தார். வங்கதேச அணி தரப்பில் ரகுமான் மட்டும் 5 விக்கெட் வீழ்த்தினார்.

314 என்ற கடினமான இலக்கை நோக்கி ஆட வந்த வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் நீண்ட நேரம் நீடிக்காமல் விரைவாக அவுட்டாகினர். அடுத்து களமிறங்கிய ஆல்ரவுண்டர் சஹிப் அல் ஹசன் மிடில் ஓவர்களில் நிலைத்து ஆடி 66 ரன்கள் அடித்தார். ஆனால் ஹர்திக் பாண்ட்யா அடுத்தடுத்து விக்கெட் வீழ்த்தி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். முகமது சைபுதீன் மட்டும் கடைசி வரை போராடினார். ஆனால் எதிர்முனையில் ஆடிய வீரர்கள் அவருக்கு ஒத்துழைக்காமல் விக்கெட்டை இழந்தனர். இதனால் இந்தியா அணி வங்கதேச அணியை 28 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

இந்திய அணி தரப்பில் பூம்ரா சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்களை எடுத்தார்.பேட்டிங்கில் ஜொலிக்கா விட்டாலும் பாண்ட்யா முக்கியமான விக்கெட்களை எடுத்து வெற்றிக்கு உதவினார். சமி, சாஹல் மற்றும் புவனேஸ்வர் குமார் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர். இங்கிலாந்துடன் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு கிடைத்த இந்த வெற்றியால் இந்திய அணி வீரர்கள் உற்சாகமடைந்துள்ளநர்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.