கரோனா பெருந்தொற்றின் தாக்கம் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், சில நாடுகளில் கரோனா இரண்டாவது அலை தொடங்கியுள்ளது. இந்நிலையில், வங்கதேச கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் மோமினுல் ஹக்குக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அவர் தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். வங்கதேச அணியின் மூத்த வீரரான மஹமுத்தலா ரியாத்துக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளிலிருந்து அவர் விலகினார்.
இச்செய்தியை வங்கதேச கிரிக்கெட் போர்டின் மூத்த மருத்துவர் தேபசிஷ் சவுத்ரி உறுதி செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "மோமினுல் ஹக்குக்கு லேசான கரோனா அறிகுறிகள் உள்ளது" என்றார். இதையடுத்து, வங்கதேச டி - 20 தொடரில் மோமினுல் ஹக் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது.