ETV Bharat / sports

இந்திய அணி வீரர்களை வாழ்த்திய வங்கதேச பிரதமர்! - சிறப்பு விருந்தினராக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா இந்தியா வருகை

கொல்கத்தா: இந்தியா - வங்கதேச அணிகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பு விருந்தினராக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியா வந்துள்ளார்.

Sheikh Hasina
author img

By

Published : Nov 22, 2019, 2:54 PM IST

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடிவருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது பகல் - இரவு போட்டியாக இன்று கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. பகலிரவு டெஸ்ட்டாக நடைபெறும் இந்த போட்டியில் பிங்க் நிற பந்து பயன்படுத்தப்படுகிறது என்பதும், இந்தியா முதன்முதலில் அதில் பங்கேற்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த சிறப்புமிக்க போட்டிக்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இன்று கொல்கத்தாவிற்கு வருகை தந்தார். மேலும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரும் இந்த டெஸ்ட் போட்டியைக் காண நேரில் வருகை தந்திருந்தனர்.

இந்நிலையில், ஷேக் ஹசீனா வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்துகளை கூறினார். அவருடன் மம்தா பானர்ஜி, சச்சின் டெண்டுல்கர், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி ஆகியோரும் இரு நாட்டு வீரர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

தற்போது பிசிசிஐ தனது ட்விட்டர் பதிவில் ஷேக் ஹசீனா வீரர்களுக்கு வாழ்த்து கூறிய காணொலியை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: கொல்கத்தாவுக்கு கிரிக்கெட் பார்க்க வந்த வங்க தேச பிரதமர்!

Intro:Body:

Sheikh Hasina, Prime Minister of Bangladesh,

@MamataOfficial

, Honourable Chief Minister, West Bengal and #TeamIndia great

@sachin_rt

greet #TeamIndia ahead of the #PinkballTest

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.