ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்று வரும் டி10 கிரிக்கெட் லீக்கின் 17ஆவது லீக் ஆட்டத்தில் திசாரா பெரேரா தலைமையிலான பங்களா டைகர்ஸ் அணி, டேரன் சமி தலைமையிலான நார்த்தன் வாரியர்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் முதலில் வென்ற டாஸ் வாரியர்ஸ் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய பங்களா டைகர்ஸ் அணிக்கு அண்ட்ரே ஃபிலெட்சர், ரோஸ்ஸோ இணை அதிரடியான தொடக்கத்தை தந்தனர். அதன் பின் இறுதியில் ராபி ஃபரைலின்க் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தி, 12 பந்துகளில் 36 ரன்களைக் குவித்தார்.
இதன் மூலம் பங்களா டைகர்ஸ் அணி 10 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 102 ரன்களை எடுத்தது. வாரியர்ஸ் அணி தரப்பில் ரயத் எம்ரிட் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய வாரியர்ஸ் அணியில், ஆண்ட்ரே ரஸ்ஸல் அதிரடியாக விளையாடி 45 ரன்களை சேர்த்துவிட்டு ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மற்ற வீரர்கள் எதிரணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியதால், வாரியர்ஸ் அணி 10 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 96 ரன்களை மட்டுமே எடுத்தது. பங்களா அணி சார்பில் டேவிட் வைஸ் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
-
Yes!!! Yet another low-scoring thriller!!! Congratulations Bangla Tigers. High-quality cricket from both teams. #AbuDhabiT10 #t10league #t10season3 #inAbuDhabi #banglatigers #northernwarriors pic.twitter.com/DuYBLHCIJE
— T10 League (@T10League) November 20, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Yes!!! Yet another low-scoring thriller!!! Congratulations Bangla Tigers. High-quality cricket from both teams. #AbuDhabiT10 #t10league #t10season3 #inAbuDhabi #banglatigers #northernwarriors pic.twitter.com/DuYBLHCIJE
— T10 League (@T10League) November 20, 2019Yes!!! Yet another low-scoring thriller!!! Congratulations Bangla Tigers. High-quality cricket from both teams. #AbuDhabiT10 #t10league #t10season3 #inAbuDhabi #banglatigers #northernwarriors pic.twitter.com/DuYBLHCIJE
— T10 League (@T10League) November 20, 2019
இதன் மூலம் பங்களா டைகர்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் நார்த்தன் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. சிறப்பாக பந்து வீசி அணியை வெற்றி பெறச்செய்த டேவிட் வைஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிங்க:கோலிக்கு பீட்டாவின் மூலம் மேலும் ஒரு மகுடம்!