ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், இரண்டாவது போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியும் வெற்றி பெற்றிருந்தன.
அதைத்தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில், அப்போதைய ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர், பேன் கிராஃப்ட் ஆகியோர் பந்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
பின்னர் இதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டபோது மைதானத்தில் இருந்த கேமராவில் பதிவான வீடியோவில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு உண்மை என கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மூவரும் தங்களது குற்றங்களை ஒப்புக்கொண்டனர். இது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பின்னர், கேப்டன் பதவியில் இருந்து ஸ்மித் நீக்கப்பட்டார்.
மேலும், ஸ்மித் மற்றும் வார்னருக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க ஓராண்டு தடையும், பேன் கிராஃப்ட்டிற்கு 9 மாத தடையும் விதிக்கப்படுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
இதனால் ஆஸ்திரேலிய அணி மூன்று முக்கியமான வீரர்களை இழந்து தொடர்களையும் இழக்க நேரிட்டது. ஆனால் வார்னர், ஸ்மித் ஆகியோர் கனடா, கரீபியன், வங்கதேசம், டி20 தொடர்களில் மட்டும் பங்கேற்று வந்தனர். தடை முடிந்த பான் கிராஃப்ட் உள்ளூர் கிரிக்கெட் தொடரான பிக்பேஷ் டி20 தொடரில் பங்கேற்று அசத்தினார்.
இந்நிலையில், ஸ்மித் மற்றும் வார்னரின் தடைக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. அவர்கள் இருவரும் தற்போது ஐபிஎல் டி20 தொடரில் ஆடி வருகின்றனர். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் உள்ள வார்னர் தனது முதல் போட்டியிலேயே 83 ரன்கள் விளாசி எதிரணியை கதிகலங்கச் செய்தார்.
எனவே, தடைக்காலம் முடிவடைந்துள்ளதால் ஸ்மித் மற்றம் வார்னர் ஆகியோர் உலகக் கோப்பை தொடருக்கான அணியில் இடம்பிடிப்பார்கள் என்றுரசிகர்கள்ஆவலுடன் காத்திருக்கின்றனர்.