நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பாகிஸ்தான் அணி, இரண்டு போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது.
இதற்கிடையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (ஜனவரி 3) கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியிருந்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது 2ஆவது டெஸ்டிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் தற்காலிக கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள முகமது ரிஸ்வான் கூறுகையில், “பாபர் அசாம் இன்னும் காயத்திலிருந்து முழுமையாக குணமடையாததால், அவர் நியூசிலாந்து அணிக்கெதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியிலிருந்தும் விலகிவுள்ளார்.
-
ICYMI: Babar Azam is set to miss the second Test against New Zealand.
— ICC (@ICC) January 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Mohammad Rizwan will continue to lead the side.#NZvPAK pic.twitter.com/kRIf97S9fA
">ICYMI: Babar Azam is set to miss the second Test against New Zealand.
— ICC (@ICC) January 2, 2021
Mohammad Rizwan will continue to lead the side.#NZvPAK pic.twitter.com/kRIf97S9fAICYMI: Babar Azam is set to miss the second Test against New Zealand.
— ICC (@ICC) January 2, 2021
Mohammad Rizwan will continue to lead the side.#NZvPAK pic.twitter.com/kRIf97S9fA
அவர் இல்லாதது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று, தொடரை சமன் செய்யும் முனைப்பில் உள்ளோம். அதற்காக நாங்கள் எங்களுடைய முழு திறனையும் வெளிப்படுத்துவோம்” என்று தெரிவித்தார்.
பாகிஸ்தான் டெஸ்ட் அணி: முகமது ரிஸ்வான் (கேப்டன்), அபித் அலி, அசார் அலி, பஹீம் அஷ்ரப், ஃபவாத் ஆலம், ஹரிஸ் சோஹைல், இம்ரான் பட், முகமது அப்பாஸ், நசீம் ஷா, சர்பராஸ் அகமது, ஷாஹீன் அஃப்ரிடி, ஷான் மசூத், சோஹைல் கான், யாஷிர் ஷா, ஜாஃபர் கோஹர்.
இதையும் படிங்க:‘கங்குலியின் உடல்நிலை சீராகவுள்ளது’ - மருத்துவமனை அறிக்கை