ETV Bharat / sports

விராட், ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட் ஆகியோருக்கு இணையான வீரர் பாபர்...!

லாகூர்: விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட் ஆகியோருக்கு இணையான வீரர் பாபர் அஸாம் என பாகிஸ்தான் பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.

babar-azam-is-very-close-to-being-in-the-same-class-as-virat-kohli-misbah

author img

By

Published : May 25, 2020, 10:49 PM IST

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் வீரர் பாபர் அஸாம். இவரை பாகிஸ்தானின் விராட் கோலி என ரசிகர்கள் செல்லமாக அழைத்து வருகின்றனர். தொடர்ந்து விராட் கோலிக்கு இணையான வீரராகவும் பாபரை அந்நாட்டு ரசிகர்கள் கட்டமைத்து வருகின்றனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளரும், பாகிஸ்தானின் தேர்வுக் குழு தலைவருமான மிஸ்பா உல் ஹக் பாபர் அஸாம் பற்றி பேசியுள்ளார். அதில், ''எனக்கு எப்போதும் வீரர்களை ஒப்பிடுவது பிடிக்காது. ஆனால் விராட் கோலி. ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட் ஆகியோருக்கு இணையான வீரர் பாபர் அஸாம்.

விராட் கோலி போன்று சிறந்த வீரராக இருக்க வேண்டும் என்றால் விராட் கோலி அளவிற்கு பாபர் அஸாமும் உழைக்க வேண்டும். அது பாபர் அஸாமிற்கு நன்றாக தெரியும்.

ஃபிட்னெஸ், விளையாட்டு விழிப்புணர்வு, திறன் என அனைத்திலும் அவர் மெருகேற்றி வருகிறார். அவரின் முக்கியமான காலத்தில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். அவர் அணிக்காகவோ, பணத்திற்காகவோ கிரிக்கெட்டை ஆடவில்லை. அவர் பாகிஸ்தானின் மிகச்சிறந்த வீரராக இருக்க வேண்டும் என்பதற்காக ஆடுகிறார். எப்போதும் விராட் கோலி, ஸ்மித் ஆகியோருக்கு எதிராக ஆடுகிறார்.

அவரின் திறமையை பரிசோதிப்பதற்காகவே அவருக்கு டி20 கேப்டன்சி கொடுக்கப்பட்டது. அதனை சிறப்பாக செய்ததன் விளைவே அவருக்கு ஒருநாள் கேப்டன்சி கொடுக்கப்பட்டது. கேப்டன் சிறப்பாக ஆடினால், அணியினரை முன்நின்று அழைத்துச் செல்ல முடியும்'' என்றார்.

இதையும் படிங்க: தோனி ஒருபோதும் அவரை ஹீரோவாக நினைத்தது இல்லை’ - பிராவோ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.