ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 21ஆம் தேதி பிரிஸ்பேனில் தொடங்கியது.
இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்டநேர முடிவிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அசாத் ஷஃபிக் 76 ரன்களை எடுத்திருந்தார். ஆஸ்திரேலியா அணி சார்பில் ஸ்டார்க் நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர், ஜோ பர்ன்ஸ் சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். இதில் ஜோ பர்ன்ஸ் 97 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின் வார்னருடன் ஜோடி சேர்ந்த லபுசாக்னே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோர் கணக்கை உயர்த்தினார்.
-
It continues! 💥
— cricket.com.au (@cricketcomau) November 22, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
David Warner brings up his 150! #AUSvPAK pic.twitter.com/X0IOVB578h
">It continues! 💥
— cricket.com.au (@cricketcomau) November 22, 2019
David Warner brings up his 150! #AUSvPAK pic.twitter.com/X0IOVB578hIt continues! 💥
— cricket.com.au (@cricketcomau) November 22, 2019
David Warner brings up his 150! #AUSvPAK pic.twitter.com/X0IOVB578h
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வார்னர் 154 ரன்களில் வெளியேற, லபுசாக்னே சர்வதேச டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தைப்பதிவு செய்தார். அதன் பின் அதிரடியாக விளையாடிய அவரும் 185 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 580 ரன்களைக் குவித்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் யாஷிர் ஷா நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
-
150 for Marnus Labuschagne! #AUSvPAK pic.twitter.com/31iyLh0zAg
— cricket.com.au (@cricketcomau) November 23, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">150 for Marnus Labuschagne! #AUSvPAK pic.twitter.com/31iyLh0zAg
— cricket.com.au (@cricketcomau) November 23, 2019150 for Marnus Labuschagne! #AUSvPAK pic.twitter.com/31iyLh0zAg
— cricket.com.au (@cricketcomau) November 23, 2019
பின் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும் சிறப்பாக விளையாடிய பாபர் ஆசம், முகமது ரிஸ்வான் இணை அணியை சரிவிலிருந்து மீட்டது.
-
Babar Azam reaches his hundred!
— ICC (@ICC) November 24, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
The Pakistan batsman brings up his second Test century in style with a four! 🙌#AUSvPAK 👇https://t.co/0d3zlDrR8C pic.twitter.com/I7NjndzFHX
">Babar Azam reaches his hundred!
— ICC (@ICC) November 24, 2019
The Pakistan batsman brings up his second Test century in style with a four! 🙌#AUSvPAK 👇https://t.co/0d3zlDrR8C pic.twitter.com/I7NjndzFHXBabar Azam reaches his hundred!
— ICC (@ICC) November 24, 2019
The Pakistan batsman brings up his second Test century in style with a four! 🙌#AUSvPAK 👇https://t.co/0d3zlDrR8C pic.twitter.com/I7NjndzFHX
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் சர்வதேச டெஸ்டில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவு செய்ததார். பின் 104 ரன்களில் பாபர் ஆசம் வெளியேற, அவரைத் தொடர்ந்து 95 ரன்களில் முகமது ரிஸ்வானும் வெளியேறி அதிர்ச்சியளித்தார். இதனால் பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 335 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
-
Australia win!
— ICC (@ICC) November 24, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Mitchell Starc snares the last wicket of Imran Khan as the hosts cruise to a comprehensive an-innings-and-five-run victory over Pakistan at The Gabba.#AUSvPAK SCORECARD 👇https://t.co/0d3zlDrR8C pic.twitter.com/nfEdJjDqS7
">Australia win!
— ICC (@ICC) November 24, 2019
Mitchell Starc snares the last wicket of Imran Khan as the hosts cruise to a comprehensive an-innings-and-five-run victory over Pakistan at The Gabba.#AUSvPAK SCORECARD 👇https://t.co/0d3zlDrR8C pic.twitter.com/nfEdJjDqS7Australia win!
— ICC (@ICC) November 24, 2019
Mitchell Starc snares the last wicket of Imran Khan as the hosts cruise to a comprehensive an-innings-and-five-run victory over Pakistan at The Gabba.#AUSvPAK SCORECARD 👇https://t.co/0d3zlDrR8C pic.twitter.com/nfEdJjDqS7
இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி இன்னிங்ஸ் மற்றும் ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய மார்னஸ் லபுசாக்னே ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: 'நாங்க மோசமானவங்கள்ல முக்கியமானவங்கே...' - டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து இப்படியும் ஓர் சாதனை!