ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக நாளை தொடங்குகிறது.
ஆனால் நியூசிலாந்து அணிக்கு அதிர்ச்சியளிக்கும் விதத்தில் அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ட்ரென்ட் போல்ட் காயம் காரணமாக முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பேசுகையில், ”போல்ட்டின் உடல்நிலை இன்னும் முழுமையாக குணமடையவில்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர்” என்றார்.
நியூசிலாந்து அணி நிர்வாகம் இதுதொடர்பாக கூறுகையில், போல்ட் குணமடையாதபட்சத்தில், மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான ஃபர்குசன் தனது முதலாவது சர்வதேச டெஸ்ட் போட்டியில் களமிறங்க வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 17 வயதில் சாம்பியன்ஸ் லீக் கால்பந்தில் சாதனைப் படைத்த பார்சிலோனா வீரர்
!