ETV Bharat / sports

'வணக்கம் டா மாப்ள' ஆஸ்திரேலியாவிலிருந்து வார்னர்! - வார்னர் புட்டபொம்மா

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு சமூகவலைதளத்தில் வைரலாகிவருகிறது.

David Warner
David Warner
author img

By

Published : Dec 5, 2020, 12:43 PM IST

Updated : Dec 5, 2020, 1:13 PM IST

ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர் சமூகவலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர், அவ்வப்போது இவர் பதிவிடும் பதிவுகள் பட்டிதொட்டி எங்கும் பட்டையைக்கிளப்பும் வகையில் வைரலாகிவிடும். தெலுங்கு பாடலான 'புட்டபொம்மா... புட்டபொம்மா' பாடலுக்கு டிக்டாக்கில் குடும்பத்துடன் இவர் போட்ட குத்தாட்டம் இணையத்தில் செம டிரெண்டிங் ஆனது.

இந்நிலையில், டிக்டாக்கில் 'வணக்கம் டா மாப்ள' என்ற வசனம் மூலம் வைரலான நபரின் கெட்டப்பில் இருக்கும் புகைப்படத்தை வார்னர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, இந்த அற்புதமான புகைப்படத்திற்கு தலைப்பிடுங்கள் என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு தமிழக ரசிகர்களிடையே பெரிதும் வரவேற்பை பெற்றுவருகிறது.

டேவிட் வார்னர்
டேவிட் வார்னர்

டிக்டாக் செயலி தடைக்கு முன்பாக தேனியைச் சேர்ந்த ஒருவர் "வணக்கம் டா மாப்ள" என பேசி டிக்டாக்கில் வெளியிட்ட வீடியோக்கள் அனைத்தும் சமூகவலைதளங்களில் டிரெண்டானதால், அவரது புகைப்படத்தை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ்களை தெறிக்கவிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டேவிட் வார்னர் இன்ஸ்டாகிராம் பதிவு
டேவிட் வார்னர் இன்ஸ்டாகிராம் பதிவு

இதையும் படிங்க:'புட்ட பொம்மா' பாடலுக்கு வார்னரின் 'பொம்மலாட்டம்'

Last Updated : Dec 5, 2020, 1:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.