ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி நான்கு போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கெனவே இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், வருகிற ஜனவரி 7ஆம் தேதி இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெறவுள்ளது.
இதற்கென இரு அணிகளும் இன்று (டிச.30) சிட்னி செல்வதாக இருந்தது. ஆனால் கரோனா ஆச்சுறுத்தல் காரணமாக இரு அணி வீரர்கள் தங்களது பயிற்சிகளை மெல்போர்னில் மேற்கொள்வர் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தில் தலைமை நிர்வாக அலுவலர் நிக் ஹாக்லி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துப் பேசிய அவர், “நேற்றிரவு சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெறும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. ஆனால் வீரர்களின் பாதுகாப்பு கருதி, அவர்களின் பயிற்சிகளை மெல்போர்னிலேயே தொடங்க திட்டமிட்டுள்ளோம். மேலும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரு தினங்களுக்கு முன்பு வீரர்கள் சிட்னிக்கு வருவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.
இதனால் இரு அணிகளும் மெல்போர்னில் பயிற்சி மேற்கொண்டு, பிறகு போட்டி தொடங்குவதற்கு இரண்டு நாள்கள் முன்னர் சிட்னிக்கு திரும்பவுள்ளனர்.
இதையும் படிங்க: ‘மெஸ்ஸி இல்லாமலும் பார்சிலோனா சிறப்பாகவே செயல்படுகிறது’