அடிலெய்டில் நேற்று தொடங்கிய இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 233 ரன்களை எடுத்திருந்தது.
இதையடுத்து இன்று 2ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி 244 ரன்களுக்குள் ஆல் அவுட்டாகி, முதல் இன்னிங்ஸை முடித்தது. இந்திய அணி தரப்பில் விராட் கோலி 74 ரன்களை எடுத்தார்.
தடுமாற்றத்தில் ஆஸ்திரேலியா:
இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்க வீரர்கள் மேத்யூ வேட், ஜோ பர்ன்ஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த ஏமாற்றமளித்தனர்.
இதனால் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின்போது ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்களை இழந்து 35 ரன்களை எடுத்துள்ளது. அந்த அணியில் லபுசாக்னே 16 ரன்களுடனும், ஸ்டீவ் ஸ்மித் ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்திய அணி தரப்பில் சிறப்பாகப் பந்துவீசிய ஜஸ்பிரித் பும்ரா, இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அஸ்வின் சுழாலில் திணறிய ஆஸி.,
அதன்பின் இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் வீசிய முதல் ஓவரிலேயே ஸ்டீவ் ஸ்மித் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் களமிறங்கிய கிரீன், டிராவிஸ் ஹெட் ஆகியோர் அஸ்வினின் அடுத்தடுத்த ஓவர்களில் விக்கெட்டை இழந்தனர்.
-
What a session for India!
— ICC (@ICC) December 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
R Ashwin picked up three crucial wickets to reduce Australia to 92/5 at tea ☕️
The hosts are trailing by 152 runs.
📝 #AUSvIND: https://t.co/Q10dx0r4nX pic.twitter.com/v60upE6PlH
">What a session for India!
— ICC (@ICC) December 18, 2020
R Ashwin picked up three crucial wickets to reduce Australia to 92/5 at tea ☕️
The hosts are trailing by 152 runs.
📝 #AUSvIND: https://t.co/Q10dx0r4nX pic.twitter.com/v60upE6PlHWhat a session for India!
— ICC (@ICC) December 18, 2020
R Ashwin picked up three crucial wickets to reduce Australia to 92/5 at tea ☕️
The hosts are trailing by 152 runs.
📝 #AUSvIND: https://t.co/Q10dx0r4nX pic.twitter.com/v60upE6PlH
இதன் மூலம் இரண்டாம் நாள் தேநீர் இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 92 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை எடுத்து தடுமாறியது.
அந்த அணியில் லபுசாக்னே 42 ரன்களுடனும், கேப்டன் பெய்ன் 13 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் அஸ்வின் மூன்று விக்கெட்டுகளையும், பும்ரா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.
இதையும் படிங்க: கால்பந்தில் அறிமுகமாகும் கன்கஷன் மாற்றுவீரர் விதி!