இது குறித்து அவர் கூறுகையில்,
இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரை வெல்வதற்கு எங்களுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்திய அணியைத் தவிர, உலகக் கோப்பையில் அதிக கவனத்தை ஈர்க்கும் அணிகளாக இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் இருக்கும் என நினைக்கிறேன்.
மற்ற அணிகளை ஒப்பிடுகையில், இங்கிலாந்து அணியில் வலுவான பேட்டிங் வரிசை உள்ளது. அதைத்தவிர, சொந்த மண்ணில் விளையாட உள்ளனர். மறுமுனையில் பாகிஸ்தான் அணியை எடுத்துக் கொண்டால், சமீபகாலமாக ஆட்டத்திறனில் அவர்களது நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளனர். இதனால், இவ்விரு அணிகளும் கோப்பை வெல்ல அதிகமான வாய்ப்புகள் உள்ளது, என தெரிவித்தார்.
மே 30 ஆம் லண்டனில் தொடங்கவுள்ள உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி, தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொள்கிறது.