ETV Bharat / sports

அதிகமான டிஆர்எஸ் வாய்ப்பு குறித்து அனில் கும்ப்ளே விளக்கம்! - அதிகமான டிஆர்எஸ் முறை

அனைத்துவிதமான போட்டிகளிலும் டிஆர்எஸ் வாய்ப்புகள் அதிகம் வழங்கியதற்கான காரணம் குறித்து ஐசிசி கிரிக்கெட் கமிட்டி தலைவர் அனில் கும்ப்ளே விளக்கமளித்துள்ளார்.

Anil Kumble explains reason behind recommending extra review for teams across formats post COVID-19

author img

By

Published : May 27, 2020, 12:53 PM IST

கரோனா காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் தொடங்கும் போது கடைபிடிக்க வேண்டிய புதிய விதிகளை அனில் கும்ப்ளே தலைமையிலான ஐசிசி கிரிக்கெட் கமிட்டி குழு பரிந்துரைத்தது. அதில், பந்துகளில் உமிழ்நீர் பயன்படுத்துவதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது. அதேபோல, போட்டிகளின் போது உள்ளூர் நடுவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

இதுமட்டுமின்றி அனைத்து விதமான போட்டிகளிலும் இரு அணிகளுக்கும் கூடுதலாக ஒரு டிஆர்எஸ் ( நடுவரின் தீர்ப்பை சரிபார்க்கும் முறை) வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. தற்போது டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் இரு அணிகளும் தலா இரண்டு டிஆர்எஸ் முறையும், ஒருநாள், டி20 போட்டிகளில் தலா ஒரு டிஆர்எஸ் முறையும் பயன்படுத்த முடியும்.

இந்நிலையில், அனைத்து விதமான போட்டிகளில் டிஆர்எஸ் வாய்ப்புகள் அதிகம் வழங்கியதற்கான காரணம் குறித்து ஐசிசி கிரிக்கெட் கமிட்டி தலைவர் அனில் கும்ப்ளே விளக்கமளித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "கிரிக்கெட் போட்டிகளை விரைவில் தொடங்க வேண்டும் என்பதுதான் தேவையாக உள்ளது என நினைக்கிறேன். தற்போதைய சூழலில் பயணக் கட்டுபாடுகள், 14 நாள்கள் தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட காரணங்களால் போட்டிகளில் வெளிநாட்டு நடுவர்களுக்கு பதில் உள்ளூர் நடுவர்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

பொதுவாக உள்ளூர் நடுவர்களுக்கு டெஸ்ட் போட்டிகளில் நடுவர்களாக இருந்த அனுபவம் இருந்திருக்காது. அதன் காரணமாக சில சமயங்களில் அவர்களின் தவறான தீர்ப்பால் போட்டிகளின் முடிவுகள் மாறும் என்பதால் இரு அணிகளுக்கும் கூடுதலாக தலா ஒரு டிஆர்எஸ் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது" என்றார்.

இதையும் படிங்க: சச்சின் சிறப்பானவர்; காலிஸ் முழுமையான கிரிக்கெட்டர் - பிரெட் லீ!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.