கடந்த மாதம் நியூசிலாந்து அணியுடனான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் வீழ்ந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணி நான்கு டெஸ்ட், மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.
இந்நிலையில், இத்தொடரின் டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர்களான ஜேம்ஸ் ஆண்டர்சன், மார்க் வூட், அதிரடி பேட்ஸ்மேனான ஜானி பெயர்ஸ்டோ ஆகியோர் மீண்டும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இந்த மூவரும் நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியிலிருந்து கழட்டி விடப்பட்டிருந்தனர். தற்போது இவர்கள் மூவரும் அணியில் இடம்பிடித்துள்ளதால், தென் ஆப்பிரிக்க அணிக்கு கடும் சவாலாக இருப்பார்கள் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
-
ICYMI: England have named their 17-man squad for their four-Test series in South Africa 👇https://t.co/RkD5hWYhJQ
— ICC (@ICC) December 8, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">ICYMI: England have named their 17-man squad for their four-Test series in South Africa 👇https://t.co/RkD5hWYhJQ
— ICC (@ICC) December 8, 2019ICYMI: England have named their 17-man squad for their four-Test series in South Africa 👇https://t.co/RkD5hWYhJQ
— ICC (@ICC) December 8, 2019
இங்
கிலாந்து டெஸ்ட் அணி விவரம்:
ஜோ ரூட் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜானி பெயர்ஸ்டோ, ஸ்டூவர்ட் பிராட், ரோரி பர்ன்ஸ், ஜோஸ் பட்லர், ஜாக் கிராலி, சாம் கரண், ஜோ டென்லி, ஜாக் லீச், பார்கின்சன், ஒல்லி போப், டொமினிக் சிபிலி, பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ் , மார்க் வூட்.
இதையும் படிங்க: சேவாக் அன்று அவுட்டாகாமல் இருந்திருந்தால்..!