ETV Bharat / sports

டி20: அதிரடி ஆட்டத்தில் மிரட்டிய மேக்ஸ்வெல்; அகர் சுழலில் வீழ்ந்தது நியூசி! - 3rd T20I

ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.

Agar scalps six as Australia thrash New Zealand in 3rd T20I

author img

By

Published : Mar 3, 2021, 9:47 PM IST

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி ஐந்து டி20 போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடிவருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி வெலிங்டனில் இன்று (மார்ச் 3) நடைபெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வுசெய்து விளையாடியது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்குத் தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் மேத்யூ வேட் 5 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஃபின்ச் - ஜோஷ் பிலிப்பே இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜோஷ் பிலிப்பே 43 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

மறுமுனையில் சிறப்பாக விளையாடிவந்த ஆரோன் ஃபின்ச் அரைசதம் கடந்து அசத்தினார். அவருடன் ஜோடி சேர்ந்த மேக்ஸ்வெல் முதலில் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டாலும், அதன்பின் பவுண்டரி, சிக்சர்கள் என விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதன்மூலம் அரைசதத்தையும் கடந்தார்.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்களைக் குவித்தது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 70 ரன்களையும், ஆரோன் ஃபின்ச் 69 ரன்களையும் குவித்தனர்.

இதைத்தொடர்ந்து இமாலய இலக்கைத் துரத்திய நியூசிலாந்து அணியில் டிம் செஃபெர்ட், கேன் வில்லியம்சன் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அதன்பின் ஜோடி சேர்ந்த மார்டின் கப்தில் - டேவன் கான்வே இணை சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.

இதில் மார்டின் கப்தில் 43 ரன்களில் ஆட்டமிழக்க, டேவன் கான்வே 38 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்கள் ஆஷ்டன் அகர் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.

இதனால் 17.1 ஓவர்களில் நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 144 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய அணியில் ஆஷ்டன் அகர் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. மேலும் ஐந்து போட்டிகள் அடங்கிய டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-2 என்ற கணக்கில் நிலைத்துள்ளது.

இதையும் படிங்க: இங்கிலாந்து தொடரிலிருந்து விலகிய பும்ராவிற்கு திருமணம்?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.