ETV Bharat / sports

“ஒருநாள் தொடரை இழந்ததும், மீதமுள்ள போட்டிகளை புதிய தொடராக கருதினோம்” - கே.எல். ராகுல்! - ஒருநாள்

ஆஸ்திரேலியா அணிக்கெதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளை இழந்ததும், மீதமுள்ள போட்டிகளை நாங்கள் ஒரு புதிய தொடரைப் போல நினைத்து விளையாடியதே எங்களது வெற்றிக்கான காரணம் என இந்திய அணியின் துணைக்கேப்டன் கே.எல். ராகுல் தெரிவித்துள்ளார்.

After losing first two ODIs, we treated remaining four games as new series: Rahul

author img

By

Published : Dec 9, 2020, 6:03 PM IST

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தாலும், டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

இந்நிலையில் தோல்வியிலிருந்து இந்திய அணி எவ்வாறு மிண்டு, வெற்றிப்பாதைக்கு திரும்பியதென இந்திய அணியின் துணைக்கேப்டன் கே.எல். ராகுல் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ராகுல், “ஆஸ்திரேலியாவுக்கு வருவதும், இரண்டு ஆட்டங்களை இழந்து மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்புவதும் எளிதானது அல்ல.

முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளுக்குப் பிறகு நாங்கள் பேசியது என்னவென்றால், மீதமுள்ள நான்கு ஆட்டங்களையும் ஒரு புதிய தொடராகக் கருதி, அந்த நான்கு ஆட்டங்களையும் வெல்ல வேண்டும் என்பது தான்.

அதன் பின் நாங்கள் ஒரு குழுவாக செயல்பட்டு சவாலான ஆட்டங்களை எதிர்கொண்டோம். அதற்கான பலனை நாங்கள் தற்போது பெற்று விட்டோம்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:பஜ்ரங் புனியா, இளவெனில் வளரிவானுக்கு இந்திய விளையாட்டு விருதுகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.