நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. நேற்று (பிப்.22) நடைபெற்ற முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.
இதைத்தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணியில் டெவன் கான்வே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணி பந்துவீச்சை பவுண்டரிகளுக்கு பறக்கவிட்டார். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கான்வே இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தும் ஒரு ரன்னில் சதமடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார்.
இதன் மூலம் இன்னிங்ஸ் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்களை குவித்தது. இதில் டெவன் கான்வே 99 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
-
Stretching into the Dream11 @SuperSmashNZ for the @cricketwgtninc Firebirds Devon Conway now has FIVE scores of 50 or more in T20 cricket in a row. #AUSvNZ #SuperSmashNZ #StatChat pic.twitter.com/1nQufpeasd
— BLACKCAPS (@BLACKCAPS) February 22, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Stretching into the Dream11 @SuperSmashNZ for the @cricketwgtninc Firebirds Devon Conway now has FIVE scores of 50 or more in T20 cricket in a row. #AUSvNZ #SuperSmashNZ #StatChat pic.twitter.com/1nQufpeasd
— BLACKCAPS (@BLACKCAPS) February 22, 2021Stretching into the Dream11 @SuperSmashNZ for the @cricketwgtninc Firebirds Devon Conway now has FIVE scores of 50 or more in T20 cricket in a row. #AUSvNZ #SuperSmashNZ #StatChat pic.twitter.com/1nQufpeasd
— BLACKCAPS (@BLACKCAPS) February 22, 2021
பின்னர் இமாலய இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணியினர் சோதி, சௌதி, போல்ட் ஆகியோரது பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
இறுதியில் ஆஸ்திரேலிய அணி 17.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 131 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
நியூசிலாந்து அணி தரப்பில் இஷ் சோதி 4 விக்கெட்டுகளையும், டிம் சௌதி, ட்ரெண்ட் போல்ட் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். மேலும் இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெவன் கான்வே ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
-
Devon Conway is just 4 days late, but what a knock 👏👏👏 #AUSvNZ
— Ashwin 🇮🇳 (@ashwinravi99) February 22, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Devon Conway is just 4 days late, but what a knock 👏👏👏 #AUSvNZ
— Ashwin 🇮🇳 (@ashwinravi99) February 22, 2021Devon Conway is just 4 days late, but what a knock 👏👏👏 #AUSvNZ
— Ashwin 🇮🇳 (@ashwinravi99) February 22, 2021
சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் வீரர்கள் ஏலத்தின் போது டெவன் கான்வேவை ஏலம் கேட்க எந்த அணியும் முன்வரவில்லை. இதுகுறித்து இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸிவின் தனது ட்விட்டர் பக்கத்தில், “டெவன் கான்வே வெறும் நான்கு நாள்கள் தாமதமாகிவிட்டது. ஆனாலும் என்ன ஒரு அற்புதமான ஆட்டம்” என்று பாராட்டி பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஐபிஎல் 2021: லீக் போட்டிகள் மும்பையில், பிளே ஆஃப் மொடீராவில்?