அயர்லாந்து - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் இந்தியாவின் நொய்டா நகரில் நடைபெற்றுவருகிறது. இன்று இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்கள் பவுல் ஸ்டெர்லிங், கெவின் ஓ பிரையன் இணை அதிரடியான தொடக்கத்தை தந்தது. இதில் சிறப்பாக விளையாடி பவுல் ஸ்டெர்லிங் சர்வதேச டி20 அரங்கில் தனது 18ஆவது அரைசதத்தைப் பதிவு செய்து அசத்தினார்.
![அயர்லாந்து அணியின் பவுல் ஸ்டெர்லிங்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/6321707_pqaul.jpg)
பின் ஸ்டெர்லிங் 60 ரன்களிலும், கெவின் ஓ பிரையன் 35 ரன்களிலும் அட்டமிழந்து வெளியேற, அணியின் கேப்டன் பால்பெரின், ஹேரி டெக்டர் இணை சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதன் மூலம் அயர்லாந்து அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களை எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணி சார்பில் ரஷித் கான் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
![விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ரஷித் கான்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/6321707_rashid.jpg)
அதன்பின் கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு ஹஸ்ரதுல்லா ஸசாய், கர்ப்ஸ் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை தந்தனர். ஸசாய் 23 ரன்களிலும், குர்பஸ் 28 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேற, அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய நஜிபுல்லா சத்ரான், ஷின்வாரி இணை அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர்.
![நஜிபுல்லா சத்ரான் - ஷின்வாரி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/6321707_parner.jpg)
இதனிடையே ஆட்டத்தின் 15ஆவது ஓவரின்போது மழை குறுக்கிட்டதால், டக்வர்த் லூயிஸ் முறைப்படி ஆப்கானிஸ்தான் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆப்கானிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: 5 பந்துகளில் 5 சிக்சர்கள் பறக்கவிட்ட தல... ஐபிஎல்லுக்கு காத்திருக்கும் ரசிகர்கள்!