இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகள் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
நான்காவது போட்டியில் மீண்டும் 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரு அணி நிர்வாகமும் கூடுதல் போட்டியை நடத்த முடிவு செய்தது. அதன்படி நாளை ஐந்தாவது போட்டி நடைபெறவிருந்த நிலையில், கூடுதலாக அறிவிக்கப்ப்டட போட்டி இன்று சூரத்தில் நடைபெறுகிறது.
எஞ்சியுள்ள இரண்டு போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றால் தொடரை சமன் செய்ய முடியும் என்பதால் அந்த அணி வெற்றிபெறும் முனைப்பில் களமிறங்குகிறது.