ETV Bharat / sports

ஐபிஎல் 2021இல் புதிதாக இரண்டு அணிகளா? பிசிசிஐ சொல்வது என்ன! - Addition of two new IPL teams

மும்பை: பிசிசிஐயின் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் பேசப்படவுள்ள 23 அம்ச நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது.

மும்பை
மும்பை
author img

By

Published : Dec 3, 2020, 2:00 PM IST

பிசிசிஐ அனைத்து பிரிவுகளுக்கும் 23 அம்ச நிகழ்ச்சி நிரலை வருடாந்திர பொதுக்கூட்டத்தின் 21 நாள்களுக்கு முன்னர் அனுப்பியுள்ளது. இந்த கூட்டமானது டிசம்பர் 24ஆம் தேதியன்று நடைபெறுகிறது.

நிகழ்ச்சி நிரலில் மிகவும் முக்கியமான அம்சம் என்னவென்றால், இரண்டு புதிய ஐபிஎல் அணிகளை இணைத்திட பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, குஜராத் தலைமையிடமாக வைத்து அணி உருவாகும் என கூறப்பட்டு வந்த நிலையில், மேலும் இன்னொரு அணி இணைக்கவுள்ளதான தகவல், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2021ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் எதிர்கால சுற்றுப்பயணங்கள் திட்டம், அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை, 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்ப்பது தொடர்பான விவாதம் ஆகியவை இந்த நிகழ்ச்சி நிரலில் அடங்கும்.

இதுமட்டுமின்றி, பிசிசிஐயின் துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா செய்ததையடுத்து, அந்த பதிவிக்கான தேர்தல் அறிவிப்பும் நிரலில் இணைக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.