ETV Bharat / sports

டி10 கிரிக்கெட்: பங்களா டைகர்ஸை வீழ்த்தியது டீம் அபுதாபி - கிறிஸ் கெய்ல்

டி10 கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டீம் அபுதாபி அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் பங்களா டைகர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Abu Dhabi T10:Team Abu Dhabi crash out Bangla Tigers

author img

By

Published : Feb 5, 2021, 3:20 PM IST

டி10 எனப்படும் பத்து ஓவர்கள் மட்டும் கொண்ட கிரிக்கெட் தொடர் அபுதாபியில் நடைபெற்று வருகின்றது. இதில் நேற்று (பிப்.04) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டீம் அபுதாபி அணி - பங்களா டைகர்ஸ் அணியை எதிர்கொண்டது.

இப்போட்டியில் டாஸ் வென்ற பங்களா டைகர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய டீம் அபுதாபி அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்தது. அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

இருந்த போதிலும் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய பால் ஸ்டெர்லிங் அரைசதம் கடந்து அசத்தினார். இதன் மூலம் 10 ஓவர்கள் முடிவில் டீம் அபுதாபி அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 116 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பால் ஸ்டெர்லிங் 64 ரன்களை எடுத்தார்.

தொடர்ந்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பங்களா டைகர்ஸ் அணி, எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதனால் 10 ஓவர்கள் முடிவில் பங்களா டைகர்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் டீம் அபுதாபி அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் பங்களா டைகர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடி அணிக்கு வெற்றியைத் தேடித்தந்த பால் ஸ்டெர்லிங் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இதையும் படிங்க: 'ஐசிசியின் விருதை தட்டிச் சென்ற ரிஷப்'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.