இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. முதல் போட்டியில் அபார வெற்றிபெற்றும், அடுத்த இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்தது.
இது குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் பேசுகையில், ''கடைசி ஓவர்களில் நாங்கள் ரன்கள் சேர்க்காததே எங்கள் அணியின் தோல்விக்கு காரணம். கடந்த இரண்டு போட்டிகளிலும் கடைசி ஓவர்களைப் பந்துவீச்சாளர்களே எதிர்கொண்டனர். பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை இழக்காமல் கடைசிவரை இருந்திருக்க வேண்டும்.
இரண்டாவது போட்டியில் ராகுல் செயல்பட்டதுபோல் எங்கள் அணியில் கடைசி நேரத்தில் எந்த பேட்ஸ்மேன்களும் செயல்படவில்லை. அதுமட்டுமல்லாமல் இந்தியாவின் பந்துவீச்சாளர்களின் துல்லியமான யார்க்கர்களும் எங்களின் தோல்விக்குக் காரணம் என நினைக்கிறேன்.
பும்ரா, ஷமி, சைனி ஆகியோர் கடைசி நேரத்தில் வீசிய யார்க்கர்கள் அனைவரையும் நிலைகுலைய செய்தது. அங்கேதான் நாங்கள் வீழ்ந்தோம். நாங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு இந்திய அணியின் இறுதி பந்துவீச்சு இருந்ததுதான் எங்களின் தோல்விக்கு காரணம்'' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நியூசிலாந்து தொடர்: தவான் பங்கேற்பதில் சந்தேகம்?