ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்று வரும் டி10 லீக் கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டேவிட் மாலன் தலைமையிலான கலந்தர்ஸ் அணி, ஈயன் மோர்கன் தலைமையிலான டெல்லி புல்ஸ் அணியை எதிர்கொண்டது.
அரையிறுதிக்கு யார் முன்னேறுவார் என்ற பரபரப்பான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் மேத்யூஸ், குசால் பெரேரா, மோர்கன் என அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேற அந்த அணி 46 ரன்களுக்குள்ளாகவே ஆறு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதனையடுத்து களமிறங்கிய நட்சத்திர வீரர் முகமது நபி தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அவர் 21 பந்துகளில் நான்கு சிக்சர், மூன்று பவுண்டரிகள் என 48 ரன்களை விளாசித்தள்ளினார். இதன் மூலம் டெல்லி அணி 10 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 98 ரன்களை எடுத்தது.
பின் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய கலந்தர்ஸ் அணியும் சீரான இடைவெளியில் தங்களது விக்கெட்டுகளை இழந்து தடுமாற, இறுதியில் ஜார்ஜ் கார்டன், ஆட்டத்தின் 9.5ஆவது ஓவரில் சிக்சர் அடித்து அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தார்.
-
What a finish under pressure! Congratulations Qalandars! 🏏🏏💪💪#AbuDhabiT10 #t10league #t10season3 #inabudhabi #AldarProperties #qalandars #delhibulls pic.twitter.com/wLw7ncqW4o
— T10 League (@T10League) November 22, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">What a finish under pressure! Congratulations Qalandars! 🏏🏏💪💪#AbuDhabiT10 #t10league #t10season3 #inabudhabi #AldarProperties #qalandars #delhibulls pic.twitter.com/wLw7ncqW4o
— T10 League (@T10League) November 22, 2019What a finish under pressure! Congratulations Qalandars! 🏏🏏💪💪#AbuDhabiT10 #t10league #t10season3 #inabudhabi #AldarProperties #qalandars #delhibulls pic.twitter.com/wLw7ncqW4o
— T10 League (@T10League) November 22, 2019
இதன்மூலம் கலந்தர்ஸ் அணி மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி புல்ஸ் அணியை வீழ்த்தி, டி10 லீக் கிரிக்கெட் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
இதையும் படிங்க: நோபால்களை கோட்டைவிட்ட அம்பயர்களால் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் டெஸ்ட்டில் சர்ச்சை