ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டராக வலம் வருபவர் கிளேன் மேக்ஸ்வெல். இவர் கடந்த மாதம் தனது உளவியல் பிரச்னையைக் காரணம் காட்டி சிறிது காலம் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வெடுப்பதாக அறிவித்தார். இதனால் அவரின் ரசிகர்கள் அதிர்ச்சியின் எல்லைக்கே சென்றனர்.
இந்நிலையில் மேக்ஸ்வெல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள இந்தாண்டுக்கான பிக் பேஷ் லீக் டி20 தொடரின் மெல்போர்ன் ஸ்டார் அணிக்காக விளையாடவுள்ளார். மேலும் அவர் இந்த அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
அடுத்தாண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதற்கான அணி நேற்று அறிவிக்கபட்டிருந்தது. அதில் ஆரோன் பின்ச் அணியை வழிநடத்துகிறார்.
-
Aaron Finch addresses the ODI squad changes for January's ODI tour of India https://t.co/7djV7gid9w pic.twitter.com/y9G2daJHit
— cricket.com.au (@cricketcomau) December 18, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Aaron Finch addresses the ODI squad changes for January's ODI tour of India https://t.co/7djV7gid9w pic.twitter.com/y9G2daJHit
— cricket.com.au (@cricketcomau) December 18, 2019Aaron Finch addresses the ODI squad changes for January's ODI tour of India https://t.co/7djV7gid9w pic.twitter.com/y9G2daJHit
— cricket.com.au (@cricketcomau) December 18, 2019
மேலும் இந்த அணியின் மேக்ஸ்வெல் இடம்பெறாதது குறித்து பின்ச்சிடம் கேள்வி எழுப்பிய போது, அவர் எங்கள் அணியின் 'முப்பரிமாண வீரர்'. அவர் கூடிய விரையில் ஆஸ்திரேலிய அணிக்கு திரும்புவார். அவர் தனது அதிரடியை காட்டும் பட்சத்தில் அணியில் அவர் உடனடியாக இடம்பிடிப்பார் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், மேக்ஸ்வெல் தனது கடைசி 10 ஒருநாள் இன்னிங்சில் அரைசதம் அடிக்கத் தவறிவிட்டார். மறுபுறம், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், ஆஃப்-ஸ்பின்னர் நாதன் லயன் ஆகியோர் தங்களது மோசமான ஃபார்ம் காரணமாக இந்திய அணிக்கெதிரான தொடரில் இடம்பெறவில்லை என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:பிக் பாஷ்: முதல் போட்டியிலேயே மாஸ் காட்டிய சிட்னி தண்டர்ஸ்!