ETV Bharat / sports

மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணி தேர்வில் முதற்கட்டமாக 65 வீரர்கள் தேர்வு! - தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்

தேனி: சின்னமனூரில் நடைபெற்ற தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணிக்கான வீரர்கள் தேர்வில் முதற்கட்டமாக 65 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

65-players-selected-for-the-first-phase-of-the-cricket-team-selection-for-the-disabled

author img

By

Published : Feb 13, 2021, 10:26 AM IST

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் நேற்று (பிப்.12) தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணிக்கான வீரர்கள் தேர்வு நடைபெற்றது. தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் சங்கம் மற்றும் எம்.டி.சி.சி விளையாட்டு அகாதமி சார்பில் நடத்தப்பட்ட இந்த தேர்வில், சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், ஈரோடு, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

பேட்டிங், பவுலிங், பீல்டிங் போன்றவைகள் மூலமாக சிறப்பாக விளையாடிய 65 வீரர்கள் ஏ,பி,சி,டி உள்ளிட்ட பிரிவுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர்களுக்கு இன்றும் (பிப்-13), நாளையும் (பிப்-14) பயிற்சி ஆட்டங்கள் நடத்தப்பட்டு, அதிலிருந்து 25 வீரர்களைத் தேர்வு செய்யவுள்ளனர்.

பயிற்சி ஆட்டங்களில் தேர்வு செய்யப்படும் வீரர்கள் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணி முகாமிற்கு அனுப்பப்பட்டு, சிறந்த விளங்கும் வீரர்கள் தமிழ்நாடு அணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணி தேர்வு

இதுகுறித்து தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் சங்கத்தினர் கூறுகையில், “தமிழ்நாட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அதிகமாக இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்க வேண்டும். தொடர்ந்து தமிழ்நாடு கிரிக்கெட் போட்டிகளுக்கு மட்டுமின்றி பல்வேறு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணி சார்பில் விளையாடிய வீரர்கள் அடுத்தகட்டமாக வருகின்ற மார்ச் மாதம் துபாயில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்” என்று தெரிவித்தனர்.

இதையும் படிங்க: பந்தின் தரத்தில் பிரச்னை: தரத்தை ஆராயுமாறு பிசிசிஐ கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.