ETV Bharat / sports

இரண்டாவது பயிற்சி ஆட்டத்தை எதிர்நோக்கும் கோலி & கோ! - இந்தியா ஏ

இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையேயான இரண்டாவது பயிற்சி ஆட்டம் நாளை (டிச.11) சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

2nd Warm-Up Game: Vihari the extra batsman and Kuldeep as extra spinner in focus

author img

By

Published : Dec 10, 2020, 8:25 PM IST

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற டிச.17ஆம் தேதியன்று தொடங்குகிறது. இதற்கு முன்னதாக இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையேயான மூன்று நாள் பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதில் டிச.06ஆம் தேதி நடைபெற்ற முதல் பயிற்சி ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இதையடுத்து, இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது பயிற்சி ஆட்டம் நாளை (டிச.11) சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

தற்போதுள்ள இந்திய அணியில், கேப்டன் கோலி, குல்தீப் யாதவ், கே.எல்.ராகுல். மயங்க் அகர்வால், பும்ரா, ஷமி ஆகியோர் இடம் பெற்றுள்ளதால், பயிற்சி ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

அதேசமயம் ஆஸ்திரேலிய அணியிலும் ஹென்ட்ரிக்ஸ், ஸ்வெப்சன், சீன் அபேட், ஹாரிஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதனால் இப்போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்தியா ஏ: ப்ருத்வி ஷா, சுப்மான் கில், சேடேஷ்வர் புஜாரா, விராட் கோலி (கே), ரஹானே, ஹனுமா விஹாரி,சஹா, ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், முகமது சிராஜ், நவ்தீப் சைனி, ரிஷப் பந்த், மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல், முகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா.

ஆஸ்திரேலியா ஏ: ஜோ பர்ன்ஸ், மார்கஸ் ஹாரிஸ், அலெக்ஸ் கேரி (கே), பென் மெக்டெர்மொட், கேமரூன் கிரீன், நிக் மேடின்சன்,ஹென்ரிக்ஸ், வில் சதர்லேண்ட், சீன் அபேட், ஹாரி கான்வே, மார்க் ஸ்டெக்கீ, மிட்செல் ஸ்வெப்சன்.

இதையும் படிங்க:இத்தாலி கால்பந்து ஜாம்பவான் பவுலோ ரோஸி காலமானார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.