அடுத்த மாதம் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று ஒருநாள், இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்நிலையில் கரோனா அச்சுறுத்தலாலும், தனிப்பட்ட காரணங்களாலும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் டெஸ்ட் கேப்டன் ஜேசன் ஹோல்டர், ஒருநாள் & டி20 கேப்டன் பொல்லார்ட், டேரன் பிராவோ, ஹெட்மையர், பூரான் உள்ளிட்ட 12 வீரர்கள் விலகியுள்ளனர்.
இது குறித்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா அச்சுறுத்தல், தனிப்பட்ட பிரச்னைகள் காரணமாக பின்வரும் வீரர்கள் வங்கதேச சுற்றுப்பயணத்தை மறுத்துவிட்டனர்.
ஜேசன் ஹோல்டர், பொல்லார்ட், டேரன் பிராவோ, ஷமர் ப்ரூக்ஸ், ரோஸ்டன் சேஸ், ஷெல்டன் கோட்ரெல், எவின் லூயிஸ், ஷாய் ஹோப், சிம்ரான் ஹெட்மையர், நிக்கோலஸ் பூரன். இதில் ஃபேபியன் ஆலன், ஷேன் டோவ்ரிச் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களினால் தொடரில் பங்கேற்கவில்லை.
மேலும் கரோனா அச்சம் காரணமாக வீரர்கள் வெளிநாட்டுச் சுற்றுப் பயணத்தைத் தவிர்க்க வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அனுமதிக்கிறது. இது அவர்களில் பாதுகாப்பு சார்ந்த விஷயம் என்பதால், அடுத்தடுத்த தொடர்களில் இந்த வீரர்கள் பங்கேற்க எந்தத் தடைகளும் இருக்காது" என்று தெரிவித்துள்ளது.
இதையடுத்து வங்கதேச அணிக்கெதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்கான அணியை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. இதில் டெஸ்ட் அணியின் கேப்டனாக அனுபவ வீரர் பிராத்வெயிட்டும், துணைக்கேப்டனாக பிளாக்வுட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேசமயம் ஒருநாள் கேப்டனாக வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியின் கேப்டன் ஜேசன் முகமது, துணைக்கேப்டனாக சுனில் ஆம்ரிஸ் நியமிக்கப்பட்டுள்ளனர்.
-
Kraigg Brathwaite & Jason Mohammed named as captains for Tour of Bangladesh. #BANvWI #MenInMaroon
— Windies Cricket (@windiescricket) December 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Full Squad details⬇️https://t.co/vpQjn6Jh8I pic.twitter.com/hrtdpW8UDB
">Kraigg Brathwaite & Jason Mohammed named as captains for Tour of Bangladesh. #BANvWI #MenInMaroon
— Windies Cricket (@windiescricket) December 29, 2020
Full Squad details⬇️https://t.co/vpQjn6Jh8I pic.twitter.com/hrtdpW8UDBKraigg Brathwaite & Jason Mohammed named as captains for Tour of Bangladesh. #BANvWI #MenInMaroon
— Windies Cricket (@windiescricket) December 29, 2020
Full Squad details⬇️https://t.co/vpQjn6Jh8I pic.twitter.com/hrtdpW8UDB
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணி: பிராத்வெயிட் (கே), ஜெர்மைன் பிளாக்வுட், நக்ருமா பொன்னர், ஜான் காம்ப்பெல், ராகீம் கார்ன்வால், ஜோசுவா டா சில்வா, ஷானன் கேப்ரியல், கவேம் ஹாட்ஜ், அல்சாரி ஜோசப், கைல் மேயர்ஸ், ஷெய்ன் மோஸ்லி, வீரசாமி பெருமாள், ரேமான் ரோஃபர் , ஜோமல் வாரிகன்.
ஒருநாள் அணி: ஜேசன் முகமது (கே), சுனில் ஆம்ரிஸ், நக்ருமா பொன்னர், ஜோசுவா டா சில்வா, ஜஹ்மர் ஹாமில்டன், செமர் ஹோல்டர், அகீல் ஹொசைன், அல்சாரி ஜோசப், கைல் மேயர்ஸ், ஆண்ட்ரே மெக்கார்த்தி, ஜார்ன் ஓட்லி, ரோவ்மன் பவல், ரேமான் ரீஃபர், ரொமாரியோ ஷெப்பர்ட் , ஹேடன் வால்ஷ் ஜூனியர்.
இதையும் படிங்க:மெல்போர்னில் மாஸ் காட்டிய அஸ்வின் - முரளி சாதனை முறியடிப்பு