ETV Bharat / sports

ரோகித் சர்மாவுக்கு கரோனா பாதிப்பு - கேப்டன்ஷிப் ரேஸில் முந்தும் பும்ரா...!

author img

By

Published : Jun 28, 2022, 5:19 PM IST

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக கரோனா பாதிப்பில் இருந்து ரோகித் சர்மா மீள்வது சந்தேகம் என்ற நிலையில் பும்ரா, ரிஷப் பந்த், விராட் கோலி ஆகியோரில் ஒருவர் கேப்டனாக பொறுப்பு வகிக்கலாம் என பிசிசிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

bumrah ahead in captaincy race
கேப்டன்ஷிப் ரேஸில் முந்தும் பும்ரா

லண்டன்: 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2-க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் 5ஆவது டெஸ்ட் போட்டி வருகிற ஜூலை 1ஆம் தேதி எட்ஜ்பாஸ்டனில் தொடங்குகிறது. இதற்காக இந்திய அணி லீசெஸ்டர்ஷைர் அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது.

அப்போது கேப்டன் ரோகித் சர்மாவுக்குக் கரோனா பாதிப்பு உறுதியானதால், அவர் 2ஆவது இன்னிங்ஸின்போது பேட்டிங் செய்ய வரவில்லை. அவர் கரோனா பாதிப்பில் இருந்து மீளாத பட்சத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் கேப்டன் பொறுப்பை வகிக்கப்போவது யார் என்ற கேள்வி நிலவுகிறது.

தொடரில் 2க்கு 1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளதால், டிரா செய்தால் கூட போதுமான கோப்பையை வெல்லலாம். மாறாக ஆட்டத்தில் தோற்றால் கோப்பையை நழுவ விட வேண்டி இருக்கும். இதனால் கேப்டன் தேர்வு முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரின்போது துணை கேப்டனாக செயல்பட்ட பும்ரா, இப்போட்டிக்கு கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அப்படி நியமிக்கப்படும் பட்சத்தில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு ஒரு வேகப்பந்து வீச்சாளர் கேப்டனாக செயல்படுகிறார் என்ற பெருமை பும்ராவுக்கு வந்து சேரும்.

ஆனால், பும்ரா இதுவரை கேப்டனாக செயல்பட்டதில்லை என்பதால் ரிஷப் பந்தின் பெயரும் கேப்டன் பொறுப்புக்கு கூறப்படுகிறது. ரிஷப் பந்திற்கு இந்திய அணியை டி-20 போட்டிகளிலும் ஐபிஎல் தொடரிலும் இரண்டு முறை டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வழிநடத்திய அனுபவமும் உண்டு. இருப்பினும் இந்த தொடர் முக்கியம் வாய்ந்ததாக உள்ளதால் அணி நிர்வாகம் அவருக்கு கேப்டன் பொறுப்பு வழங்குவது சந்தேகம் தான்.

இருவருக்கும் பதிலாக முன்னாள் கேப்டனான கோலியை இந்தப் போட்டிக்கு மட்டும் கேப்டனாக செயல்பட அணி நிர்வாகம் வலியுறுத்தலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால், கோலி இதனை ஒப்புக் கொள்வாரா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: டி-20 உலகக்கோப்பைக்குப்பின் நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.