ETV Bharat / sports

IPL Auction 2024 : செலக்சனில் எப்பவுமே தல டோனி தான் பெஸ்ட்! சிஸ்கேவுக்கு அடித்த ஜாக்பாட்!

நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா மற்றும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூர் உள்ளிட்டோரை இந்திய அணி விலைக்கு வாங்கியது.

ஷர்துல் தாக்கூர்
Shardul Thakur
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 19, 2023, 3:46 PM IST

துபாய் : 17வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதையொட்டி வீரர்களின் மினி ஏலம் இன்று (டிச. 19) துபாயில் நடைபெற்று வருகிறது. நட்சத்திர வீரர்களை ஏலம் எடுக்க அணிகளிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மற்றும் கடைசி வரிசையில் விளையாடக் கூடிய ஆல் ரவுண்டர் ஷர்துல் தாக்கூரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 கோடி ரூபாய் விலைக்கு வாங்கியது. மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தை சேர்ந்த வலக்கை வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூரை விலைக்கு வாங்குவதில் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகளிடையே கடும் போட்டி நிலவியது.

கடந்த சீசனில் கொல்கத்தா அணியில் விளையாடிய ஷர்துல் தாக்கூர், அதன் பின் அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டார். ஆரம்பத் தொகையாக 2 கோடி ரூபாயுடன் களம் இறங்கிய ஷர்துல் தாக்கூரை விலைக்கு வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் கடும் போட்டி போட்டுக் கொண்டன.

இறுதியில் ரேசில் சென்னை அணி வென்றது. 4 கோடி ரூபாய்க்கு ஷர்துல் தாக்கூரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன் வசமாக்கியது. இதுவரை 10 டெஸ்ட், 47 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக ஷர்துல் தாக்கூர் விளையாடி உள்ளார். இந்திய ஏ அணிக்காகவும், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளில் விளையாடி உள்ளார்.

அதேபோல் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அபாரமாக செயல்பட்ட நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவை ஒரு கோடியே 80 லட்ச ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விலைக்கு வாங்கியது. 50 லட்ச ரூபாய் அடிப்படை தொகையுடன் களம் கண்ட ரச்சின் ரவீந்திராவை கடும் போட்டிகு மத்தியில் சென்னை அணி கைப்பற்றியது. எதிர்வரும் சீசனில் சென்னை அணியின் தொடக்க வீரராக ரச்சின் ரவீந்திரா களமிறக்க வாய்ப்பு இருப்பதாக தகல் கூறப்படுகிறது. அதேபோல் மற்றொரு நியூசிலாந்து வீரர் டென் டேரி மிட்செல்லையும் சென்னை அணி வாங்கியது.

இதையும் படிங்க : IPL Auction 2024: ஐபிஎல் வரலாற்றில் சாதனை படைத்த பேட் கம்மின்ஸ்! இவர் தான் பர்ஸ்ட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.