ETV Bharat / sports

ENG vs IND: இங்கிலாந்தை புரட்டி எடுத்த பும்ரா - விக்கெட் இழப்பின்றி இந்தியா வெற்றி - Bumrah

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பும்ரா 7.2 ஓவர்களில் 19 ரன்களை மட்டும் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

India vs England
India vs England
author img

By

Published : Jul 13, 2022, 6:55 AM IST

Updated : Jul 13, 2022, 7:07 AM IST

லண்டன்: இந்திய அணி 1 டெஸ்ட், 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளை விளையாட இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று, 2021-22 டெஸ்ட் தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது. அடுத்த நடைபெற்ற டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தனதாக்கியது.

இதைத்தொடர்ந்து, இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று (ஜூலை 12) நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி, இங்கிலாந்தை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி, களமிறங்கிய இங்கிலாந்து அணியின் ஓப்பனிங் பேட்டர்களை, பும்ரா - ஷமி கூட்டணி தங்களது ஸ்விங், ஸீம் வேரியேஷனில் கதிகலங்கச் செய்தது.

ஆட்டம் கண்ட இங்கிலாந்து ஓப்பனிங்: ஜேசன் ராய், ஜோ ரூட் ஆகியோர் பும்ரா பந்துவீச்சிலும், பென் ஸ்டோக்ஸ் ஷமியிடமும் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். இம்மூவரும் டக் அவுட்டான நிலையில், பேர்ஸ்டோவ் 7 ரன்களில் பும்ராவிடம் வீழ்ந்தார். தொடர்ந்து வந்த லிவிங்ஸ்டனும் பும்ரா பந்துவீச்சில் கிளீன் போல்டாகி வெளியேறினார்.

இங்கிலாந்து 7.5 ஓவர்களில் 26/5 என்று தத்தளித்தது. கேப்டன் பட்லர் ஒருமுனையில் நின்று விளையாட, மறுமுனையில் இருந்தவர்கள் பெவிலியனுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். பட்லருடன் மொயின் அலி சற்று நேரம் தாக்குபிடித்தார். இந்த ஜோடி 27 ரன்களை எடுத்தபோது, மொயின் அலி 14 ரன்களில் பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஷமி வீசிய அடுத்த ஓவரில் பட்லரும் 30 ரன்களில் நடையைக்கட்டினார்.

ஷமி 150*: பட்லரின் விக்கெட்டை எடுத்ததன் மூலம் ஒருநாள் போட்டிகளில் தனது 150ஆவது விக்கெட்டை ஷமி கைப்பற்றினார். ஓவர்டனும் 8 ரன்களில் ஷமி பந்துவீச்சில் போல்டானார். பின்னர், 9ஆவது விக்கெட்டுக்கு ஜோடி ஜார்ஜ் வில்லி - பிரைடன் கார்ஸ் ஜோடி 35 ரன்களை சேர்த்தது. நேற்றைய போட்டியில், இங்கிலாந்து பேட்டர்களின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் இதுதான்.

இங்கிலாந்து குறைந்த ஸ்கோர்: ஆனால், மீண்டும் தாக்குதலுக்கு வந்த பும்ரா இந்த ஜோடியை பிரித்தார். கார்ஸ் 15 ரன்களிலும், வில்லி 21 ரன்களிலும் பும்ராவின் அடுத்தடுத்த ஓவர்களில் வெளியேறினர். இதன்மூலம், இங்கிலாந்து அணி 25.2 ஓவர்களில் 110 ரன்களை எடுத்து ஆல்-அவுட்டானது. ஒருநாள் போட்டிகளில், இந்திய அணிக்கு எதிராக இங்கிலாந்தின் குறைவான ஸ்கோர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய பந்துவீச்சில், பும்ரா 7.2 ஓவர்களை வீசி 19 ரன்களை மட்டும் கொடுத்து, 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுவே, ஒருநாள் போட்டிகளில் அவரின் சிறப்பான பந்துவீச்சாகும். ஷமி 3 விக்கெட்டுகளையும், பிரசித் கிருஷ்ணா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

111 ரன்கள் என்ற எளிய இலக்குடன் ரோஹித் - தவான் ஜோடி களமிறங்கியது. இருப்பினும், இந்த இணை பொறுமையாக விளையாடி, 18.4 ஓவர்களில் தங்களின் விக்கெட்டுகளை இழக்காமல் இலக்கை அடைந்தது. இதன்மூலம், இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி, தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

லார்ட்ஸில் அடுத்த போட்டி: ரோஹித் 76 ரன்களுடனும், தவான் 31 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அசத்தலாக பந்துவீசி வெற்றிக்கு பெரும் பங்காற்றிய பும்ரா ஆட்டநாயகனாக தேர்வானார். இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை (ஜூலை 14) நடைபெறுகிறது.

இதையும் படிங்க: உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கம்; மயிலாடுதுறை விவசாயி மகள் சாதனை

Last Updated : Jul 13, 2022, 7:07 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.