ETV Bharat / sports

Reece Topley: உலகக் கோப்பை தொடரில் இருந்து ரீஸ் டாப்லி விலகல்.. பின்னணி என்ன? - BCCI

Cricket world cup 2023: காயம் காரணமாக ஐசிசி உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகிய இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லிக்கு பதிலாக பிரைடன் கார்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

brydon carse will replace reece topley
brydon carse will replace reece topley
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 23, 2023, 5:13 PM IST

பெங்களூரு: கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி பவுண்டரி கணக்கில் கோப்பையை கைப்பற்றியது. இதனையடுத்து நடப்பு சாம்பியனாக இங்கிலாந்து அணி 2023 உலகக் கோப்பையில் காலடி எடுத்து வைத்தது. ஜோஸ் பட்லர் தலைமையிலான இந்த அணியில் பல அதிரடி வீரர்கள் நிறைந்திருப்பதால், இங்கிலாந்து அணி கோப்பையைக் கைப்பற்றும் அணியில் ஒன்றாகப் பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இதுவரை அந்த அணி பெரிதாக சோபிக்கவில்லை. விளையாடிய 4 போட்டிகளில் 3 தோல்விகளைத் தழுவியது. இதனால் அந்த அணி புள்ளி பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. குறிப்பாக பலம் வாய்ந்த நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணியிடம் மட்டுமின்றி ஆப்கானிஸ்தான் அணியுடனும் வரலாற்றுத் தோல்வியை அடைந்தது.

இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் முதல் மிடில் ஆர்டர், லோயர் ஆர்டர் வரை யாரும் சரியான ஃபார்மில் இல்லாததால் அந்த அணி பல அதிர்ச்சி தோல்விகளைச் சந்தித்து வருகிறது. மேலும், பந்துவீச்சில் கூட ரீஸ் டாப்லியை தவிர்த்து எவரும் பெரிதாக விக்கெட்களை கைப்பற்றவில்லை. அவர் விளையாடிய 3 போட்டிகளில் 8 விக்கெட்களை வீழ்த்தினார். இந்நிலையில், அவரும் காயம் காரணமாக உலக கோப்பை தொடரிலிருந்து வெளியேறி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில், வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லி இடது ஆள்காட்டி விரலில் ஏற்பட்ட காயம் காரணமாகப் பாதியிலேயே மைதானத்தை விட்டு வெளியேறினார். அதன்பின் அவர் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த நிலையில், அவருக்கு எடுக்கப்பட்ட ஸ்கேனில், அவரது இடது ஆள்காட்டி விரல் உடைந்து இருக்கலாம் என தெரியவந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர் மீதமுள்ள உலகக் கோப்பை போட்டிகளில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ரீஸ் டாப்லிக்கு பதிலாக இளம் வேகப்பந்து வீச்சாளரான பிரைடன் கார்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் இங்கிலாந்து அணிக்காக 12 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதில் அவர் 14 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சாதனை மன்னன் விராட் கோலி! நடப்பு தொடரில் இவர் தான் முதலிடம்! ரோகித்தும் லேசுபட்ட ஆள் இல்ல!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.