சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான பென் ஸ்டோக்ஸ் அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசனில் விளையாட மாட்டார் என சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், பென் ஸ்டோக்ஸ் அதிக பணிச்சுமை மற்றும் உடற்தகுதி காரணமாக 2024 ஐபிஎல் சீசனில் இருந்து விலகுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
🦁 NEWS FROM THE PRIDE🔔
— Chennai Super Kings (@ChennaiIPL) November 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Read More ⬇️
">🦁 NEWS FROM THE PRIDE🔔
— Chennai Super Kings (@ChennaiIPL) November 23, 2023
Read More ⬇️🦁 NEWS FROM THE PRIDE🔔
— Chennai Super Kings (@ChennaiIPL) November 23, 2023
Read More ⬇️
முன்னதாக சர்வதேச ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற பென் ஸ்டோக்ஸ் சமீபத்தில் நடந்து முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக தனது ஓய்வு முடிவை திரும்பப் பெற்றார். மேலும் அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதத்தில் இந்திய அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளார்.
அதனை தொடர்ந்து 20 ஓவர் உலகக் கோப்பையிலும் விளையாடவுள்ளார். ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து பென் ஸ்டோக்ஸ் விலகியது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரருக்கு ஐசிசி தடை! என்ன காரணம் தெரியுமா?