ETV Bharat / sports

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

Asia Cup 2023: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான 17 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 21, 2023, 2:27 PM IST

Updated : Aug 21, 2023, 2:35 PM IST

டெல்லி: ஐசிசி ஒருநாள் உலக கோப்பை வரும் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கு முன்னதாக இந்திய அணி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. இந்த ஆசிய கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நேபாளம் ஆகிய அணிகள் விளையாடுகின்றன.

ஏற்கனவே பாகிஸ்தான், இலங்கை , வங்கதேசம் அணிகள் தனது வீரர்கள் பட்டியலை வெளியிட்டுவிட்டது. இந்நிலையில் ஆசிய கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்து உள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான 17 வீரர்கள் கொண்ட அணியை பிசிசிஐ இன்று (ஆகஸ்ட் 21) அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சூடு... பதக்கங்களை வென்று குவித்த இந்திய வீரர்கள்!

டெல்லியில் இன்று (ஆக்ஸ்ட் 21) நடைபெற்ற தேர்வு குழு கூட்டத்தில் ரோஹித் சர்மா மற்றும் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து ரோஹித் சர்மா தலைமையிலான 17 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த அணியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கே.எல் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இணைந்து உள்ளனர். காயத்தில் இருந்த இருவரும் நீண்ட இடைவெளிக்கு பிறகு அணியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். மேலும், சர்வதேச அறிமுக போட்டியிலேயே அனைவரையும் தன்வசம் ஈர்த்த இடது கை பேட்டரான இளம் வீரர் திலக் வர்மாவுக்கும் அணியில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆசிய கோப்பைக்கான இந்திய அணி விவரம்:

ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், திலக் வர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, பிரசித் கிருஷ்ணா, சஞ்சு சாம்சன் (மாற்று வீரர்)

இதையும் படிங்க: Malinga : மும்பை இந்தியன்ஸில் மீண்டும் இணைகிறாரா மலிங்கா?

Last Updated : Aug 21, 2023, 2:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.